வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடக்க இருக்கும் ஏலத்தின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விடுவிக்கப்பட்ட ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் திருவிழா நடக்க இருக்கிறது. இதுவரையில் நடந்த ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை டிராபியை வென்றுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜஸ் அணிகள் தலா ஒரு முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன.
இதையடுத்து 17ஆவது ஐபிஎல் 2024 சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தொடக்க இருக்கிறது. அதற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இதற்கிடையில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்படட் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், டேவிட் வைஸ், ஆர்யா தேசாய், என் ஜெகதீசன், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, ஷர்துல் தாக்கூர், லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுதி, ஜான்சன் சார்லஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிஎஸ்கே அணியை வழி நடத்த தோனிக்கு கிடைத்த வாய்ப்பு – 212 போட்டிகளில் 128 வெற்றி கொடுத்த கேப்டன்!
இதில், ஷர்துல் தாக்கூர் சிறந்த ஆல் ரவுண்டர் என்பதால், அவருக்கான ஏலத் தொகையானது 30 முதல் 35 கோடி வரையில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழல்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க தடுமாறு போது இந்திய அணியில் சிறந்த விக்கெட் டேக்கராக ஷர்துல் தாக்கூர் இருந்துள்ளார். அவரை நம்பி ஓவர் கொடுத்தால் அதற்கான பலன் உடனே கிடைக்கும் வகையில் விக்கெட் எடுத்து கொடுப்பார்.
Sri Lanka Cricket Board: விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ரோஷன் ரணசிங்கே அதிரடி நீக்கம்!
பவுலிங்கில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் திறமை கொண்டவர். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடர்களில் சிறந்து விளங்கிய வீரர்கள் இந்த ஏலப் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத வாய்ப்பு ஷர்துல் தாக்கூருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.