கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் தற்போது கொல்கத்தா வந்து அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. 16ஆவது சீசனின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. கௌதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றது. அதன் பிறகு கேகேஆர் அணி பெரிதும் சோபிக்கவில்லை.
புதிய ஐபிஎல் அணியில் இணைய போவதாக அறிவிப்பு - வீடியோ வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டீவ் ஸ்மித்!
இதையடுத்து கடந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனாலும், இவரது தலைமையில் கோப்பையை கைப்பற்றவில்லை. இந்த நிலையில், இந்த சீசனில் அவர் களமிறங்கி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமா ஐபிஎல் தொடரின் பாதிக்குப் பிறகு கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் அல்லது சுனில் நரைன் கேப்டனாக பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிதிஷ் ராணா தற்காலிக கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
ரோகித் சர்மாவின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
வங்கதேச வீரர்கள் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோரும் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடுகின்றனர். இந்நிலையில், கேகேஆர் அணியில் இடம்பெற்றுள்ள அந்த அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான நியூசிலாந்தை சேர்ந்த லாக்கி ஃபெர்குசனும் ஐபிஎல்லில் ஆடுவது சந்தேகம் என்று கூறப்பட்டது. ஃபின் ஆலன், க்ளென் ஃபிலிப்ஸ் ஆகியோருடன் சேர்ந்து ஃபெர்குசனும் 26ம் தேதி இந்தியாவிற்கு வருவதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக ஃபெர்குசன் இந்தியாவிற்கு வரவில்லை என்று சொல்லப்பட்டது.
குண்டா இருக்க, போய் சாப்பிடு; பாகிஸ்தான் வீரரை சைகையால் உருவ கேலி செய்த ரசிகர்; வைரலாகும் வீடியோ!
இந்த நிலையில், பெர்குசன் வரும் வீடியோ ஒன்றை கேகேஆர் வெளியிட்டுள்ளது. அதில், காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று சுரைக்காய் தேடும் பெர்குசனுக்கு ஒரு பெரிய சுரைக்காய் ஒன்றை காய்கறி கடைக்காரர் எடுத்து கொடுக்கிறார். அதை கையில் வைத்துக் கொண்டே சிரித்தபடியே, நீங்கள் இந்த லௌகியைத் தேடவில்லை, மாறாக இந்த லாக்கியைத் தான் தேடுகிறீர்கள் என்று தன்னை சுட்டிக் காட்டினார்.
கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று லாக்கி பெர்குசன் விளையாடினார். இதில், 13 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தற்போது இந்த ஆண்டு கேகேஆர் அணி அவரை ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேகேஆர் அணி:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங், நாராயண் ஜெகதீசன், வைபவ் அரோரா, சுயாஷ் ஷர்மா, டேவிட் வீஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, மந்தீப் சிங், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன்.