WPL 2023 Opening Ceremony: கியாரா அத்வானி உற்சாக நடனம்: கோலாகலமாக தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக்!

Published : Mar 04, 2023, 07:49 PM IST
WPL 2023 Opening Ceremony: கியாரா அத்வானி உற்சாக நடனம்: கோலாகலமாக தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக்!

சுருக்கம்

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, கிரித்தி சனோன், ஏ.பி.திலன் ஆகியோரது உற்சாக நடனத்துடன் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.

ஆண்களுக்கான ஐபிஎல் தொடரைப் போன்று இந் த ஆண்டு முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் என்று 5 பணிகள் பங்கேற்கின்றன. இன்று ஆரம்பமான இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரும் 26 ஆம் தேதி வரையில் நடக்கிறது.

ரசிகர்களுக்காக பிரியாவிடை போட்டியில் பங்கேற்கும் சானியா மிர்சா!

இன்று நடக்கும் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளும் மோதுகின்றன. இன்றிரவு 7.30 மணிக்கு மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் மோதும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரானி கோப்பை போட்டியில் ஒரு இரட்டை சதம்; ஒரு சதம்.. வரலாற்று சாதனை படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்த நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் மிக பிரமாண்டமாக பாலிவுட் நடிகைகளின் உற்சாக நடனத்துடன் தொடங்கியுள்ளது. இதில், பிரபல பஞ்சாபி பாடகர் ஏ.பி.திலன் பாடல் பாடி அசத்தியுள்ளார். பாலிவுட் நடிகைகளான கியாரா அத்வானி, கிரித்தி சனோன் ஆகியோர் உற்சாகமாக நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியொக்களை மகளீர் பிரீமியர் லீக் டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடர் முழுவதையும் நெட்வொர்க் 18 நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதன் முறையாக, தொடங்கப்பட்டுள்ள இந்த தொடர் முழுவதையும் ஜியோ சினிமாவில் இலவசமாக போனில் பார்த்து மகிழலாம்.

9 சாதனைகளை முறியடிக்க திட்டமிட்டு 6 சாதனைகளை தகர்த்த தமிழக மாணவிகள்!

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹைலீ மேத்யூஸ், நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தாரா குஜ்ஜர், அமெலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், அமன்ஜோத் கௌர், ஜிந்தாமனி கலிதா, இசி வாங், சோனம் யாதவ்/சைகா இஷாக்.

உத்தேச குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி:

பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), சபினேனி மேகனா, ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், ஹேமலதா, கில் கார்த், அன்னாபெல் சதர்லேண்ட், ஸ்னே ராணா, ஹர்லி காலா/அஷ்வனி குமாரி, மன்சி ஜோஷி/மோனிகா படேல், தனுஜா கன்வார்.

 

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!