ஷேன் வார்னின் முதலாமாண்டு நினைவு தினம்: வார்ன் வீசிய நூற்றாண்டின் சிறந்த பந்தின் வீடியோ

Published : Mar 04, 2023, 04:03 PM IST
ஷேன் வார்னின் முதலாமாண்டு நினைவு தினம்: வார்ன் வீசிய நூற்றாண்டின் சிறந்த பந்தின் வீடியோ

சுருக்கம்

ஷேன் வார்னின் முதலாமாண்டு நினைவு தினமான இன்று, அவரது நினைவாக அவர் வீசிய நூற்றாண்டின் சிறந்த பந்தின் வீடியோவை பார்ப்போம்.  

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவரும், ஆல்டைம் சிறந்த ஸ்பின்னர்களில் டாப் இருவரில் ஒருவரானவருமானவர் ஷேன் வார்ன். டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்கு(800 விக்கெட்டுகள்) அடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் ஷேன் வார்ன்(708).

1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணியில் ஆடிய வார்ன், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ், ஜெயசூரியா போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களை தனது மாயாஜால சுழலால் திணறடித்தவர்.  ரிஸ்ட் ஸ்பின்னரான ஷேன் வார்ன் வீசியுள்ள சில சுழற்பந்துகள், காலத்தால் அழியாதவை. 

இந்தூர் மாதிரி பிட்ச்சில் சும்மா டொக்கு டொக்குனு ஆடக்கூடாது.. ஷ்ரேயாஸ் ஐயர் மாதிரி ஆடணும் - ரோஹித் சர்மா

ஆல்டைம் சிறந்த சுழல் ஜாம்பவானான ஷேன் வார்னின் முதலாமாண்டு நினைவு தினமான இன்று, அவர் வீசிய நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்தை பார்ப்போம். 

ஷேன் வார்ன் அவரது கிரிக்கெட் கெரியரில் எத்தனையோ அருமையான பந்துகளை வீசியிருந்தாலும், அவர் அறிமுகமான 1993ம் ஆண்டிலேயே, நூற்றாண்டின் சிறந்த பந்தை வீசிவிட்டார். 1993ம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங்கிற்குத்தான் அந்த பந்தை வீசினார்.

ஸ்பின்னர்கள் வீசிய நோ பாலால் இந்திய அணி அடைந்த டாப் 3 தோல்விகள்

வலது கை பேட்ஸ்மேனான மைக் கேட்டிங்கிற்கு வார்ன் வீசிய பந்து, லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி ஆஃப் ஸ்டம்பை கழட்டி எறிந்தது. ஷேன் வார்னின் இந்த மாயாஜால சுழலில் க்ளீன் போல்டான மைக் கேட்டிங் சிறிது நேரம் களத்தில் நின்று என்ன நடந்தது என்று யோசித்துவிட்டு சென்றார். அதுதான் நூற்றாண்டின் சிறந்த பந்தாக பார்க்கப்படுகிறது. அந்த பந்தின் வீடியோ இதோ...
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!