யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக கண்ணீரை துடைத்த காவ்யா மாறன் – வைரலாகும் வீடியோ!

By Rsiva kumar  |  First Published May 26, 2024, 11:21 PM IST

கேகேஆர் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோசமாக விளையாடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் காவ்யா மாறன் கண்ணீர்விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது.


சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அபிஷேக் சர்மா 2, டிராவிஸ் ஹெட் 0, ராகுல் திரிபாதி 9 என்று வரிசையாக ஹைதராபாத் வீரர்கள் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து, நிதிஷ் குமார் ரெட்டி 13, எய்டன் மார்க்ரம் 20, ஹென்ரிச் கிளாசென் 16 ரன்களில் வெளியேறினார்.

 

Kavya Maran was hiding her tears. 💔

- She still appreciated KKR. pic.twitter.com/KJ88qHmIg6

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

Tap to resize

Latest Videos

undefined

 

பின்னர் வந்த ஷாபாஸ் அகமது 8, அப்துல் சமாத் 4, ஜெயதேவ் உனத்கட் 4 ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக பேட் கம்மின்ஸ் 24 ரன்களில் வெளியேறினார். இந்தப் போட்டியில் 24 ரன்களே அதிகபட்சமாக ரன்னாக இருந்துள்ளது. இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரஸல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியனான கொல்கத்தா – 3ஆவது முறையாக மகுடம் சூடிய கேகேஆர்!

பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து குர்பாஸ் அகமது மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில் குர்பாஸ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அப்போது கேகேஆர் 8.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்திருந்தது.

சென்னை கோட்டையில் சாம்பியனான KKR – கவுதம் காம்பீர், ஷ்ரேயாஸ் ஐயர் அண்ட் கோவிற்கு குவியும் பாராட்டு!

கடைசியில் கேகேஆர் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேகேஆர் 10.2 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக டிராபியை வென்றுள்ளது. இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர் தலைமையிலான கேகேஆர் அணியானது 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் டிராபியை வென்றது. தற்போது முதல் முறையாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டிராபியை கைப்பற்றியுள்ளது.

Worst IPL: வரலாற்றில் முதல் முறையாக 33 இன்னிங்ஸ்களில் SRH அணியில் ஒருவர் கூட 25 ரன்களை எட்டாமல் மோசமான சாதனை!

இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் மிக மோசமாக விளையாடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் வருத்தப்படுகிறார்களோ இல்லையோ அணியின் துணை உரிமையாளரான காவ்யா மாறன் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். ஆனால், மறைத்துக் கொண்டு கண்ணீரை துடைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!