எஸ்ஏ20 லீக் தொடரில் மும்பை கேப்டவுனுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐபிஎல் தொடர் போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான எஸ்ஏ20 தொடர் கடந்த 10 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. இதில், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், எம்.ஐ.கேப் டவுன், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேபில்ஸ் என்று மொத்தம் 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
முதலில் ஜிம் ஒர்க் அவுட், இப்போ யோகா பயிற்சி - வைரலாகும் ஹர்திக் பாண்டியா புகைப்படம்!
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசன்களிலும் பரிதாபமாக விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நல்ல வீரர்களை வாங்கி போடுங்கள் என்று ஜெயிலர் பட விழாவில் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதையடுத்து துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இது ஒரு புறம் இருக்க எஸ்ஏ20 லீக்கில் ஹைதராபாத் அணியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வாங்கியது. கடந்த ஆண்டு நடந்த எஸ்ஏ20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர் கேப் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆண்டு கடந்த 10 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10 ஆம் தேதி வரையில் நடைபெற்று வருகிறது.
இது என்ன பேட்டிங் பிட்சா? இந்திய அணியில் மாற்றமா? ஷிவம் துபே, ரிங்கு விளையாடுவார்களா?
இதுவரையில் விளையாடிய 2 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது ஒரு தோல்வி மற்றும் ஒரு டிரா என்று இருந்தது. இந்த நிலையில் நேற்று எம்.ஐ.கேப் டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையிலான 8ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது.
அனுபவத்திற்கு ஆப்பு வச்ச ஜிம்பாப்வே – கடைசில பவுலிங் போட்டு வாங்கி கட்டிக் கொண்ட மேத்யூஸ்!
இதில், அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜோர்டன் ஹெர்மன் 62 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டேவிட் மலான் 53 ரன்கள் குவித்தார். இதையடுத்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியில் ரியான் ரிக்கல்டன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மும்பை கேப் டவுன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கடைசி ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Winning moment last ball kavya Maran ji happy 😊 pic.twitter.com/sYWNkbxJ4J
— ORANGE ARMY (@SUNRISERSU)