உலகக் கோப்பை தொடரில் காயம் ஏற்பட்ட நிலையில், தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் இதுவரையில் எந்தப் போட்டியிலும் இடம் பெறாமல் ஓய்வில் இருந்து வரும் ஹர்திக் பாண்டியா தற்போது யோகா பயிற்சி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது கணுக்கால் காயம் ஏற்பட்ட நிலையில் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகினார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடர், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடர், ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் என்று எதிலும் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை.
தற்போது இந்தியாவில் நடந்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும் பாண்டியா இடம் பெறவில்லை. தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஹர்திக் பாண்டியா ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. நேரடியாக ஐபிஎல் தொடரில் இடம் பெற உள்ளார். அதுவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் 2024 தொடரில் இடம் பெற உள்ளார்.
இது என்ன பேட்டிங் பிட்சா? இந்திய அணியில் மாற்றமா? ஷிவம் துபே, ரிங்கு விளையாடுவார்களா?
இந்த நிலையில் தான் முதலில் ஜிம் ஒர்க் அவுட் செய்த ஹர்திக் பாண்டியா தற்போது யோகா பயிற்சி செய்து வருகிறார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. பிசிசிஐயால் நடத்தப்படும் இந்திய பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
அனுபவத்திற்கு ஆப்பு வச்ச ஜிம்பாப்வே – கடைசில பவுலிங் போட்டு வாங்கி கட்டிக் கொண்ட மேத்யூஸ்!