இது என்ன பேட்டிங் பிட்சா? இந்திய அணியில் மாற்றமா? ஷிவம் துபே, ரிங்கு விளையாடுவார்களா?

Published : Jan 17, 2024, 12:31 PM IST
இது என்ன பேட்டிங் பிட்சா? இந்திய அணியில் மாற்றமா? ஷிவம் துபே, ரிங்கு விளையாடுவார்களா?

சுருக்கம்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில், நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடக்கிறது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

அனுபவத்திற்கு ஆப்பு வச்ச ஜிம்பாப்வே – கடைசில பவுலிங் போட்டு வாங்கி கட்டிக் கொண்ட மேத்யூஸ்!

ஆனால், தற்போது இருக்கும் பெங்களூரு மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், ஸ்பின்னர்களால் விக்கெட் கைப்பற்ற முடியாது என்று கூறப்படுகிறது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன்களுக்கு மேல் எடுக்கும். இந்திய அணியில் ரிங்கு சிங், ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் - விராட் கோலி, அனுஷ்கா சர்மாவிற்கு அழைப்பு!

ஆனால், முதல் 2 டி20 போட்டியில் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்த ரோகித் சர்மா இந்தப் போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஏற்கனவே டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இன்று நடக்கும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜித்தேஷ் சர்மாவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம் பெறலாம். ரவி பிஷ்னாய் அல்லது அக்‌ஷர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெறலாம்.

35 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டென்னிஸ் வரலாற்றில் சாதனை படைத்த இந்திய வீரர் சுமித் நாகல்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: ஷஃபாலி வர்மா மின்னல் வேக சதம்! வங்கதேசத்தை பந்தாடி பைனலுக்கு சென்ற இந்தியா!
Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!