டி20 உலக கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற 30% தான் சான்ஸ் இருக்கு..! கபில் தேவ் அதிரடி

By karthikeyan V  |  First Published Oct 19, 2022, 7:40 PM IST

டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணிக்கு 30% தான் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து கூறியுள்ளார்.
 


டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. கடந்த 16ம் தேதி முதல் நடந்துவரும் தகுதிச்சுற்று போட்டிகள் வரும் 21ம் தேதியுடன் முடிவடைகிறது. 22ம் தேதியிலிருந்து சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.

23ம் தேதி மெல்பர்னில் நடக்கும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் டி20 உலக கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் ஆருடம் தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - நாங்களும் ரோஷக்காரங்க தான்.. 2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உ லக கோப்பையை புறக்கணிக்கும் பாகிஸ்தான்..?

டி20 உலக கோப்பைக்கு அரையிறுதிக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்று கருத்து கூறியுள்ள முன்னாள் ஜாம்பவான்கள் அனைவரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளை உறுதியாக தேர்வு செய்துள்ளனர். மேலும் இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகளில் இரண்டை மாறி மாறி தேர்வு செய்துள்ளனர்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் இந்திய அணி ஏமாற்றமளித்த நிலையில், இந்த முறை கண்டிப்பாக அரையிறுதிக்கு முன்னேறும் என்று பலரும் நம்புகின்றனர்.

இதையும் படிங்க - அதிவேக யார்க்கர் வீசி ஆஃப்கான் வீரரின் காலைஉடைத்த ஷாஹீன் அஃப்ரிடி! இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை?வைரல் வீடியோ

இந்நிலையில், கபில் தேவ் மற்றவர்களின் கருத்துக்கு முற்றிலும் முரணான கருத்தை கூறியுள்ளார். இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் என்று பெரும்பாலானோர் நம்பிக்கை தெரிவித்துவரும் நிலையில் அதுகுறித்து பேசியுள்ள கபில் தேவ், டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஒரு போட்டியில் ஜெயிக்கும் அணி அடுத்த போட்டியில் தோற்கும். எனவே இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வது குறித்து கருத்து கூறுவது மிகக்கடினம். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா என்பதே கேள்வி தான். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால்தான் எதுவும் சொல்லமுடியும். என்னை பொறுத்தமட்டில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற 30 சதவிகிதம் தான் வாய்ப்புள்ளது என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
 

click me!