நாங்களும் ரோஷக்காரங்க தான்.. 2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உ லக கோப்பையை புறக்கணிக்கும் பாகிஸ்தான்..?

By karthikeyan VFirst Published Oct 19, 2022, 6:25 PM IST
Highlights

2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு வந்து இந்திய அணி ஆடாதபட்சத்தில், இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 2012ம் ஆண்டுக்கு பின் இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடிவருகின்றன. இந்திய அணி கடைசியாக 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றதுதான். அதன்பின்னர் 15-16 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட செல்லவில்லை.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த வேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விருப்பம் தெரிவித்துவந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.

இதையும் படிங்க - T20 WC: வாழ்வா சாவா போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெஸ்ட்இண்டீஸ் வெற்றி! Super12 சான்ஸை தக்கவைத்த கரீபியன்ஸ்

அடுத்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ள நிலையில், ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதில் இந்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இந்நிலையில், நேற்று நடந்த பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் முடிந்தபின் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 2023 ஆசிய கோப்பை பொதுவான ஒரு இடத்தில் நடத்தப்படும் என்று ஜெய் ஷா கூறினார்.

ஜெய் ஷாவின் கருத்தால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆட மறுத்தால் 2023ல் இந்தியாவில் நடத்தப்படும் ஒருநாள் உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அறிக்கையில், ஆசிய கோப்பை பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்ற ஜெய் ஷாவின் கருத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்திருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமோ, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்களிடமோ  கலந்தாலோசிக்காமல் ஜெய் ஷா கருத்து கூறியது சரியல்ல. 

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடத்துவது என்று முடிவு செய்தபோது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர் நாட்டு வாரியங்கள் அனைத்தும் ஒருமித்த கருத்துடன் ஆதரவளித்தன. அப்படியிருக்கையில், இப்போது ஜெய் ஷா கூறிய கருத்து தனிப்பட்ட முறையில் அவர்களாக கூறும் கருத்து. ஜெய் ஷாவின் கருத்து, 1983ம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அமைக்கப்பட்டபோது எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ, அதற்கு எதிரான கருத்து. 

இதையும் படிங்க - அதிவேக யார்க்கர் வீசி ஆஃப்கான் வீரரின் காலைஉடைத்த ஷாஹீன் அஃப்ரிடி! இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை?வைரல் வீடியோ

பிசிசிஐயின் இந்த கருத்து பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் ஆட பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வராது. 2024-2031 காலக்கட்டத்தில் இந்தியாவில் நடக்கும் எந்த ஐசிசி தொடரிலும் பாகிஸ்தான் பங்கேற்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அதிரடி முடிவால், இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு பஞ்சாயத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!