T20 WC: வாழ்வா சாவா போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெஸ்ட்இண்டீஸ் வெற்றி! Super12 சான்ஸை தக்கவைத்த கரீபியன்ஸ்

By karthikeyan VFirst Published Oct 19, 2022, 5:14 PM IST
Highlights

டி20 உலக கோப்பை தகுதிப்போட்டியில் ஜிம்பாப்வேவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்தது.
 

டி20 உலக கோப்பையில் இன்று க்ரூப் பி-யில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையேயான தகுதிப்போட்டிகள் இன்று நடந்தன. ஹோபர்ட்டில் இன்று நடந்த முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.

அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் ஜிம்பாப்வேவும் மோதின. ஹோபர்ட்டில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், எவின் லூயிஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷமர் ப்ரூக்ஸ், ரோவ்மன் பவல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், அல்ஸாரி ஜோசஃப், ஒடீன் ஸ்மித், ஒபெட் மெக்காய்.

இதையும் படிங்க - அதிவேக யார்க்கர் வீசி ஆஃப்கான் வீரரின் காலை உடைத்த ஷாஹீன் அஃப்ரிடி! இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை?வைரல் வீடியோ

ஜிம்பாப்வே அணி:

சகாப்வா (கேப்டன், விக்கெட் கீப்பர்), வெஸ்லி மதீவெரெ, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, டோனி முன்யோங்கா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டெண்டாய் சத்தாரா, ரிச்சர்ட், பிளெஸ்ஸிங் முஸாராபானி.

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எவின் லூயிஸ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் பூரன் வெறும் 7 ரன்களுக்கு நடையை கட்ட, சிறப்பாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 36 பந்தில் 45 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.

ஷமர் ப்ரூக்ஸ் (0), ஜேசன் ஹோல்டர்(4) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். ரோவ்மன் பவல் 21 பந்தில் 28 ரன்களும்,  அகீல் ஹுசைன் 18 பந்தில் 23 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 153 ரன்கள் மட்டுமே அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

154 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு முதல் ஓவரிலேயே 18 ரன்கள் கிடைத்தது. ஆனாலும் அந்த அணி வீரர்கள் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் இலக்கை அடிக்க முடியவில்லை. கேப்டனும் தொடக்க வீரருமான சகாப்வா 13 ரன்களுக்கும், சிக்கந்தர் ராசா 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 8ம் வரிசையில் இறங்கிய ஜாங்வே தான் அதிகபட்சமாக 29 ரன்கள் அடித்தார். அல்ஸாரி ஜோசஃபின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி விக்கெட்டுகளை இழந்தது.

18.2 ஓவரில் 122 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆல் அவுட்டானதையடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்று வாய்ப்பை தக்கவைத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. அல்ஸாரி ஜோசஃப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிங்க - இந்தியா - நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டி ரத்து..! 2 போட்டிகளை கெடுத்துவிட்ட மழை

க்ரூப் பி-யில் உள்ள வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய 4 அணிகளுமே தலா 2 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இந்த க்ரூப்பில் கடைசி 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். 4 அணிகளுக்குமே இந்த 2 போட்டிகள் கடும் சவாலாகத்தான் இருக்கும். 
 

click me!