நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகினார். புதிய கேப்டனாக டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான அணிகளுக்கும் கேன் வில்லியம்சன் தான் கேப்டனாக இருந்துவந்தார். இந்நிலையில், டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு பிரண்டன் மெக்கல்லமிற்கு பிறகு நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சியை கேன் வில்லியம்சன் ஏற்றார். இதுவரை 40 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார் வில்லியம்சன். அதில், 22 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். 10 போட்டிகளில் நியூசிலாந்து தோல்வியை தழுவியது. 8 போட்டிகள் டிராவில் முடிந்தன.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், முதல் சாம்பியன் நியூசிலாந்து அணி தான். 2019-2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவும் நியூசிலாந்தும் ஃபைனலுக்கு முன்னேறின. ஃபைனலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டைட்டிலை வென்ற பெருமைக்கும் சாதனைக்கும் உரியவர் கேன் வில்லியம்சன். இந்நிலையில், டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து மட்டும் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் சீனியர் வீரர்கள்.. ப்ரமோஷன் பெறும் 2 தரமான பேட்ஸ்மேன்கள்
இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து ஆடவுள்ள டெஸ்ட் தொடரிலிருந்து டிம் சௌதி கேப்டனாக செயல்படவுள்ளார். 34 வயதான ஃபாஸ்ட் பவுலர் டிம் சௌதி, 88 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர். அவர் கேன் வில்லியம்சன் ஆடாத போட்டிகளில் டி20 கிரிக்கெட்டில் 22 போட்டிகளில் நியூசிலாந்து அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒரு கேப்டனாகவும் ஒரு பிளேயராகவும் நல்ல அனுபவம் கொண்டவர் டிம் சௌதி என்பதும் குறிப்பிடத்தக்கது.