BAN vs IND: முதல் டெஸ்ட்டில் 90 ரன்கள் அடித்த புஜாரா அபார சாதனை

By karthikeyan VFirst Published Dec 14, 2022, 10:05 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் அடித்த புஜாரா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் திலீப் வெங்சர்க்காரை பின்னுக்குத்தள்ளி 8ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல்(22) மற்றும் ஷுப்மன் கில் (20) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். விராட் கோலி ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடித்து ஆடிய ரிஷப் பண்ட் 45 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அப்பா சச்சினை போலவே அறிமுக ரஞ்சி போட்டியில் சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கர்..! புலிக்கு பிறந்தது பூனையாகுமா..?

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய புஜாரா அரைசதம் அடிக்க, அவருடன் இணைந்து நன்றாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயரும் அரைசதம் அடித்தார். 90 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார் புஜாரா. புஜாரா -ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 149 ரன்களை குவித்தனர். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல் 26 பந்தில் 14 ரன்கள் அடித்து முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்து அதிருப்தியளித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்துள்ளது.

இந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 34வது சதத்தை விளாசிய புஜாரா, 90 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் 90 ரன்கள் குவித்த புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 6882 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் திலீப் வெங்சர்க்காரை பின்னுக்குத்தள்ளி 8ம் இடத்திற்கு முன்னேறினார். 6868 ரன்களுடன் 8ம் இடத்தில் இருந்த வெங்சர்க்காரை புஜாரா பின்னுக்குத்தள்ளியுள்ளார்.

தற்போது ஆடிவரும் இந்திய வீரர்களில் கோலிக்கு (8075*) அடுத்தபடியாக 2ம் இடத்தில் புஜாரா உள்ளார்.

பிசிசிஐக்கு நிகரான ஊதியம், வீடு, கார் எல்லாம் தருகிறோம்..! அயர்லாந்தின் கோரிக்கையை நிராகரித்த சஞ்சு சாம்சன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியல்:

1. சச்சின் டெண்டுல்கர் - 15,921
2. ராகுல் டிராவிட் - 13,265
3. சுனில் கவாஸ்கர் - 10,122
4. விவிஎஸ் லக்‌ஷ்மண் - 8,781 
5. வீரேந்திர சேவாக் - 8,503
6. விராட் கோலி - 8,075*
7. சௌரவ் கங்குலி - 7,212
8. புஜாரா - 6,882
 

click me!