
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்த தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், 2வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றதால் 1-1 என தொடர் சமனில் உள்ளது.
3வது டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய மகளிர் அணி:
ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தேவிகா வைத்யா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, ராதா யாதவ், அஞ்சலி சர்வானி, ரேணுகா தாகூர் சிங், ராஜேஷ்வரி கெய்க்வாட்.
ஆஸ்திரேலிய மகளிர் அணி:
பெத் மூனி, அலைசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தாலியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, கிரேஸ் ஹாரிஸ், அனாபெல் சதெர்லேண்ட், நிகோலா கேரி, அலானா கிங், மேகன் ஸ்கட், டார்சி ப்ரௌன்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைஸா ஹீலி ஒரு ரன்னில ஆட்டமிழந்தார். முதல் 2 போட்டிகளிலும் 80 ரன்களுக்கும் அதிகமாக குவித்த பெத் மூனியை இந்த போட்டியில் இந்த போட்டியில் 30 ரன்களுக்கு வீழ்த்தினார் தேவிகா வைத்யா.
அதன்பின்னர் மெக்ராத்(1), கார்ட்னெர்(7) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினாலும், எலைஸா பெர்ரி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடி 47 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவித்தார். கிரேஸ் ஹாரிஸ் அதிரடியாக ஆடி 18 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 41 ரன்களை விளாச, 20 ஓவரில் 172 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி, 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.