ஷாக்கான ஆஸி, அடுத்தடுத்து காயமடைந்த வீரர்கள்: இந்தியாவை எப்படி சமாளிக்க போகிறது?

By Rsiva kumarFirst Published Feb 5, 2023, 12:40 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூரில் நடக்க உள்ள நிலையில், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட் ஆகிய வீரர்கள் விலகியுள்ளனர்.
 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத்தில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. வரும் 9ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மது போதையில் சமையல் பாத்திரம் கொண்டு மனைவி மீது தாக்குதல்: வினோத் காம்ப்ளி மீது புகார்!

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு தகுதிபெறுவது கிட்டத்தட்ட உறுதி. 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி அந்த இடத்தை தக்கவைத்து ஃபைனலுக்கு முன்னேற, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 அல்லது 3-1 அல்லது 2-0 அல்லது 2-1 என ஜெயிக்க வேண்டும். எனவே இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.

ஷிகர் தவானின் மொபைல் போனை ஆட்டைய போட்டு டான்ஸ் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர்!

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்

ஆஸ்திரேலியா:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அஸ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கரே, கேமரூன் க்ரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஸ் ஹசல்வுட், டிரேவிஸ் ஹெட், உஸ்மான் ஹவாஜா, மார்னஸ் லபுசேஞ்ச், நாதன் லயன், லான்ஸ் மோரிஸ், டோட் முர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வீப்சன், டேவிட் வார்னர்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் தோற்று உலக குரூப் 2 சுற்றுக்கு தள்ளப்பட்ட இந்தியா!

ஏற்கனவே விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டி வரையில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீனால் பந்து வீச முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது, மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹசல்வுட் ஆகிய இருவரும் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். மிட்செல் ஸ்டார்க்கிற்கு பயிற்சியின் போது விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று ஜோஸ் ஹசல்வுட்டிற்கும் இடது காலின் குதிகால் பின்புறத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹசல்வுட் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர். இதனால், ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஏன் பார்டர் கவாஸ்கர் டிராபி முக்கியம்: இதுவரையில் நடந்த டிராபி தொடரில் என்னென்ன சம்பவங்கள் நடந்தது?

click me!