என்னால் ஈசியா சிக்ஸர் அடிக்க முடியும்.. நான் ஏன் சிங்கிள் எடுக்கணும்..? இஷான் கிஷன் துணிச்சல் பேச்சு

By karthikeyan VFirst Published Oct 10, 2022, 4:30 PM IST
Highlights

இஷான் கிஷன் சிங்கிள் ரொடேட் செய்து ஆடாதது விமர்சனத்துக்குள்ளான நிலையில், எளிதாக சிக்ஸர் அடிக்கும் திறமை கொண்ட தனக்கு சிங்கிள் எடுத்து ஆட வேண்டிய அவசியமில்லை என்று இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் 40 ஓவரில் 250 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 40 ஓவரில் 240 ரன்கள் அடித்து 9 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அந்த போட்டியில் சஞ்சு சாம்சனும் ஷ்ரேயாஸ் ஐயரும் அடித்து ஆடினர். சஞ்சு சாம்சன் 63 பந்தில் 86 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 37 பந்தில் 50 ரன்கள் அடித்தும் கூட இந்திய அணி தோற்றது. அதற்கு, ருதுராஜ் கெய்க்வாட்(42 பந்தில் 19 ரன்கள்) மற்றும் இஷான் கிஷன் (37 பந்தில் 20 ரன்கள்) ஆகிய இருவரும் மந்தமாக பேட்டிங் ஆடியது காரணமாக அமைந்துவிட்டது.

இதையும் படிங்க - தன் கேட்ச்சை பிடிக்கவிடாமல் மார்க் உட்டை கையை நீட்டி தடுத்த மேத்யூ வேட்..! மிக மட்டமான செயல்.. வைரல் வீடியோ

ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆட வேண்டியதில்லை. முடிந்தவரை பந்தை வீணடிக்காமல் சிங்கிள் ரொடேட் செய்து ஆடினாலே போதும். களத்தில் செட்டில் ஆனபின், அடித்து ஆடி ஸ்டிரைக் ரேட்டை அதிகரித்துக்கொள்ளலாம். ஆனால் சிங்கிள் ரொடேட் செய்யவில்லை என்றால் ஸ்கோர் வெகுவாக குறையும். 

2வது ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் - இஷான் கிஷன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 161 ரன்களை குவித்தனர். ஆரம்பத்தில் சற்று திணறிய இஷான் கிஷன், களத்தில் செட்டில் ஆனபின்னர் அடித்து ஆடி சிக்ஸர்களாக விளாசி 84 பந்தில் 93 ரன்களை குவித்து, 110.71 என்ற ஸ்டிரைக்ரேட்டுடன் இன்னிங்ஸை முடித்தார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இஷான் கிஷன், சில வீரர்களுக்கு சிங்கிள் ரொடேட் செய்து ஆடுவதுதான் பலம். ஆனால் எனது பலம் சிக்ஸர் அடிப்பதுதான். கஷ்டப்படாமல் எளிதாக சிக்ஸர்களை என்னால் அடிக்க முடியும். நான் சிக்ஸரின் மூலம் ஸ்கோர் செய்து எனது பணியை சரியாக செய்யமுடியும் என்றால், நான் ஏன் சிங்கிள் ரொடேட் செய்ய வேண்டும்?

இதையும் படிங்க - ஐபிஎல்லில் ஆடாதீங்க.. இந்திய வீரர்களை விளாசிய கபில் தேவ்

சிக்ஸர் அடிப்பதுதான் பலம் எனும்போது அதையே செய்யலாமே.. மற்றொரு முனையில் விக்கெட்டுகள் சரியும்போது சிங்கிள் ரொடேட் செய்து ஆடலாம். சிங்கிள் ரொடேட் செய்வது முக்கியம் தான். சிங்கிளாக அடித்து நான் சதமடிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. நாட்டுக்காக ஆடும்போது எனது தனிப்பட்ட ஸ்கோரில் கவனம் செலுத்த முடியாது. ஐபிஎல்லில் நான் 99 ரன்களுடன் களத்தில் இருந்தபோது, கடைசி 2 பந்தில் அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை. அந்த சமயத்தில் நான் சிங்கிள் அடித்து சதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் அணி எப்படி ஜெயிக்க முடியும் என்று இஷான் கிஷன் கேள்வி எழுப்பினார்.
 

click me!