மகளிர் ஆசிய கோப்பை: தாய்லாந்துக்கு எதிராக 6 ஓவரில் இலக்கை அடித்து இந்திய அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Oct 10, 2022, 3:35 PM IST
Highlights

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தாய்லாந்துக்கு எதிரான போட்டியில்  38 ரன்கள் என்ற இலக்கை 6 ஓவரில் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகிறது. பாகிஸ்தானிடம் மட்டும் ஒரேயொரு தோல்வியை அடைந்த இந்திய அணி மற்ற அனைத்து  போட்டிகளிலும் ஜெயித்துள்ளது.

சில்ஹெட்டில் நடக்கும் இன்றைய போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்டு ஆடிய இந்திய அணி இந்த போட்டியிலும் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதையும் படிங்க - ஷ்ரேயாஸ் ஐயர் அபார சதம்.. அபாரமாக ஆடி சதத்தை தவறவிட்ட இஷான் கிஷன்! 2வது ODI-யில் இந்தியா அபார வெற்றி

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), சபினேனி மேகனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கிரன் நவ்கிரே, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ஸ்னே ராணா, மேக்னா சிங், ராஜேஷ்வரி கெய்க்வாட்.

முதலில் பேட்டிங் ஆடிய தாய்லாந்து அணியில் ஒரேயொரு வீராங்கனை மட்டுமே இரட்டை இலக்கத்தையே எட்டினார். அவரும் 12 ரன் மட்டுமே அடித்தார். மற்ற அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இலக்கம் அல்லது ரன்னே அடிக்காமல் என மளமளவென ஆட்டமிழக்க, 15.1 ஓவரில் வெறும் 37 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தாய்லாந்து அணி.

இதையும் படிங்க - ஐபிஎல்லில் ஆடாதீங்க.. இந்திய வீரர்களை விளாசிய கபில் தேவ்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த மிகக்குறைவான ஸ்கோர் இதுதான். தாய்லாந்தை குறைவான ஸ்கோருக்கு சுருட்டி இந்திய மகளிர் அணி சாதனை படைத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ராணா 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா மற்றும் ராஜேஷ்வரி கெய்க்வாட் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

38 ரன்கள் என்ற இலக்கை 6வது ஓவரிலேயே அடித்து இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆசிய கோப்பையில் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது இந்திய அணி.
 

click me!