T20 World Cup: இந்தியா vs மேற்கு ஆஸ்திரேலியா லெவன் இடையே பயிற்சி போட்டி! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan V  |  First Published Oct 10, 2022, 2:21 PM IST

மேற்கு ஆஸ்திரேலியா லெவனுக்கு எதிராக இந்தியா பயிற்சி போட்டியில் ஆடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.
 


டி20 உலக கோப்பை வரும் 16ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் அதற்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்ட நிலையில், டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக சில பயிற்சி போட்டிகளில் ஆடுகிறது.

அந்தவகையில், இன்று அஷ்டான் டர்னர் தலைமையிலான மேற்கு ஆஸ்திரேலியா லெவனுக்கு எதிராக இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடுகிறது. பெர்த்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - தன் கேட்ச்சை பிடிக்கவிடாமல் மார்க் உட்டை கையை நீட்டி தடுத்த மேத்யூ வேட்..! மிக மட்டமான செயல்.. வைரல் வீடியோ

டி20 உலக கோப்பையில் இந்திய அணி எந்த ஆடும் லெவன் காம்பினேஷனுடன் ஆடும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், அதற்கான விடை இன்று கிடைத்துள்ளது. பேட்டிங் ஆர்டர் கிட்டத்தட்ட உறுதி. விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யார் ஆடுவார் மற்றும் பும்ரா இடத்தில் யார் ஆடுவார் என்ற கேள்விகள் தான் உள்ளது. 

அந்தவகையில், இது பயிற்சி போட்டி என்பதால் இருவருமே ஆடுகிறார்கள். ரோஹித் சர்மாவுடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக ஆடுகிறார். விராட் கோலி இந்த போட்டியில் ஆடவில்லை. 3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவும், 4ம் வரிசையில் தீபக் ஹூடாவும், 5ம் வரிசையில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், ஃபினிஷராக தினேஷ் கார்த்திக்கும் ஆடுகின்றனர்.

ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஆடுகின்றனர். டி20 உலக கோப்பையில் பும்ராவிற்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க - ஐபிஎல்லில் ஆடாதீங்க.. இந்திய வீரர்களை விளாசிய கபில் தேவ்

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
 

click me!