ஷ்ரேயாஸ் ஐயர் அபார சதம்.. அபாரமாக ஆடி சதத்தை தவறவிட்ட இஷான் கிஷன்! 2வது ODI-யில் இந்தியா அபார வெற்றி

By karthikeyan VFirst Published Oct 9, 2022, 9:28 PM IST
Highlights

ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனின் அபாரமான பேட்டிங்கால் தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆவேஷ் கான்.

தென்னாப்பிரிக்க அணி:

ஜே மலான், குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேஷவ் மஹராஜ் (கேப்டன்), ஃபார்ச்சூன், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.

இதையும் படிங்க - தன் கேட்ச்சை பிடிக்கவிடாமல் மார்க் உட்டை கையை நீட்டி தடுத்த மேத்யூ வேட்..! மிக மட்டமான செயல்.. வைரல் வீடியோ

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக்  5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜே மலான் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவரில் 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்க அணி. அதன்பின்னர் ரீஸா ஹென்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 21 ஓவரில் 129 ரன்களை குவித்தனர்.

ரீஸா ஹென்ரிக்ஸ் 76 பந்துகளில் 74 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இருவருக்குமே சதமடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் கூட, இருவரும் சதத்தை தவறவிட்டனர். கிளாசன் 26 பந்தில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 40 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 221 ரன்கள் அடித்திருந்தது. எனவே 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் வாய்ப்பு அந்த அணிக்கு இருந்தது. அடித்து ஆடக்கூடிய டேவிட் மில்லர் டெத் ஓவர்களில் களத்தில் இருந்தும் கூட, இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்களான முகமது சிராஜ், ஆவேஷ் கான் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய மூவரும் டெத் ஓவர்களை அபாரமாக வீசி, ஸ்கோர் செய்யவிடாமல் கட்டுப்படுத்தியதன் விளைவாக, தென்னாப்பிரிக்க அணி 50 ஓவரில் 278 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து 279 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 13 ரன்னில் ஆட்டமிழந்து இந்த போட்டியிலும் ஏமாற்றமளித்தார். 26 பந்துகள் ஆடி நல்ல தொடக்கத்தை பெற்ற ஷுப்மன் கில் 28 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின்னர் இஷான் கிஷன் - ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 161 ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடி 93 ரன்களை குவித்த இஷான் கிஷன் 7 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - ஐபிஎல்லில் ஆடாதீங்க.. இந்திய வீரர்களை விளாசிய கபில் தேவ்

ஆனால்  செம ஃபார்மில் அபாரமாக பேட்டிங் ஆடிவரும் ஷ்ரேயாஸ் ஐயர் சதமடித்தார். 111 பந்தில் 113 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். சஞ்சு சாம்சன் 30 ரன்கள் அடித்தார். 46வது ஓவரில் 279 ரன்கள் என்ற இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி டெல்லியில் நடக்கிறது.
 

click me!