குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் காயம் காரணமாக வெளியேறினார்.
ஐபிஎல் திருவிழாவின் 2ஆவது குவாலிஃபையர் போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில் எலிமினேட்டரில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ், குவாலிஃபையர் 2ஆவது சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. இதில், சுப்மன் கில் அதிகபட்சமாக 129 ரன்கள் குவித்தார். 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் இதில் அடங்கும். ஆனால், ஜோர்டான் ஓவரில் கில் 30 ரன்களாக இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை டிம் டேவிட் கோட்டைவிட்டார். இதையடுத்து அவர் 129 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் 2023 பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? மும்பைக்கு ரூ.7 கோடி, லக்னோவிற்கு ரூ.6.5 கோடி!
இதுவே மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு காரணமாக இருக்கும் என்று கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டார்கள். இதையடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் மட்டும் ஓரளவு ரன்கள் சேர்த்தார். அவர் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 43 ரன்கள் எடுத்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.
ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த சின்ன இளவரசன் சுப்மன் கில்!
இந்த நிலையில், மும்பை பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, விக்கெட் கீப்பர் இஷான் கிஷானில் இடது கண் பகுதியில், கிறிஸ் ஜோர்டானின் முழங்கை பலமாக அடித்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த இஷான் கிஷான் வலியால் துடித்த நிலையில், உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், பிளேயிங் லெவனிலிருந்தும் வெளியேறினார். இதன் காரணமாக அவருக்குப் பதிலாக விஷ்ணு வினோத் விக்கெட் கீப்பராக களமிறங்கினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் ஆடும் போது இஷான் கிஷான் வரவில்லை. தொடக்க வீரராக நேஹல் வதேரா களமிறங்கினார். ஒருவேளை இஷான் கிஷான் களமிறங்கியிருந்தால் மும்பை வெற்றி பெற்றிருக்கலாம். ஏற்கனவே மும்பையின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகிய நிலையில், அவருக்குப் பதிலாகத் தான் கிறிஸ் ஜோர்டான் களமிறங்கினார். இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய ஜோர்டான் 22 ஓவர்கள் வீசி 237 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
கர்மா: தலைகீழாக மாறிய மும்பை இந்தியன்ஸ் போட்டி – எலிமினேட்டர் vs குவாலிஃபையர் 2!