குழந்தைகளுடன் லண்டனில் செட்டிலா? வதந்திகளுக்கு மத்தியில் முதல் புகைப்படத்தை பகிர்ந்த அனுஷ்கா சர்மா!

By Rsiva kumar  |  First Published Jul 9, 2024, 6:16 PM IST

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் லண்டனில் குடியேற இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அனுஷ்கா சர்மா முதல் முறையாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. டிராபி வென்று 4 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய அணி வீரர்களுக்கு ரூ.125 கோடிக்கான பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

டி20 WC டிராபி வென்ற கையோடு சர்ச்சையில் சிக்கிய ரோகித் சர்மா: ஆளாளுக்கு வரிந்து கட்டி வரும் ரசிகர்கள்!

Tap to resize

Latest Videos

இதைத் தொடர்ந்து விராட் கோலி அவசர அவசரமாக லண்டனுக்கு புறப்பட்டார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வைரலானது. அதன் பிறகு லண்டனில் தரையிறங்கிய கோலி மனைவி அனுஷ்கா சர்மா, குழந்தைகள் வாமிகா மற்றும் அகாய்யை சந்தித்து மகிழந்தார். இந்த நிலையில் தான் விராட் கோலி லண்டனில் குடியேற இருப்பதாக செய்தி வெளியானது. அதோடு, குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்தியாவில் அவர்களால் சாதாரணமான வாழ்க்கை வாழ முடியாது என்பதாலும், குழந்தைகளின் ஒவ்வொரு அசைவும் பேசுபொருளாகும் என்பதாலும் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

Olympics 2024: ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவில் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தும் பிவி சிந்து!

அதோடு, டிராபி வென்ற கையோடு கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். மேலும், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பார். அதோடு, ஐபிஎல் தொடரிலும் கோலி விளையாடுவார். இந்த நிலையில் தான் அனுஷ்கா சர்மா நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் செர்ரி பழங்கள் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rohit Sharma is not Captain : ரோகித் சர்மா கிடையாது – பாண்டியாவா? ராகுலா? இலங்கை தொடருக்கு யார் கேப்டன்?

click me!