அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் – கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் ரெஸ்டாரண்ட் மீது வழக்கு பதிவு!

By Rsiva kumar  |  First Published Jul 9, 2024, 12:47 PM IST

நள்ளிரவில் வரை உணகம் நடத்தி சமூகத்தை சீரழிக்கும் விதமாக நடந்து கொண்ட விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் ரெஸ்டாரண்ட் மீது பெங்களூருவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


டி20 உலகக் கோப்பை தொடரில் கடைசியாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு வந்தன. பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா கடைசியாக 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த தொடருக்கு பிறகு டி20 கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு ரோகித் சர்மாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Olympics 2024: ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவில் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தும் பிவி சிந்து!

Latest Videos

undefined

டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். அதன் பிறகு மும்பையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி அணிவகுப்பு நடத்தினர். கடைசியாக வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த தொடரில் விராட் கோலி விளையாடிய முதல் 7 போட்டிகளில் மொத்தமாக 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், இறுதிப் போட்டியில் மட்டுமே கடைசி வரை நின்று விளையாடி இக்கட்டான தருணத்தில் இந்திய அணிக்கு 76 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். டி20 உலகக் கோப்பை வெற்றி அணிவகுப்பிறகு பிறகு விராட் கோலி அவசர அவசரமாக லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Rohit Sharma is not Captain : ரோகித் சர்மா கிடையாது – பாண்டியாவா? ராகுலா? இலங்கை தொடருக்கு யார் கேப்டன்?

தற்போது பெங்களூரு எம்ஜி சாலையில் உள்ள விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் ரெஸ்டாரண்ட்டிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 1 மணிக்கும் மேலாக ரெஸ்டாரண்ட் திறந்திருந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ததற்காக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பெங்களூருவில் உள்ள கப்பன் பார்க் காவல் துறையினர், எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக ரெஸ்டாரண்ட் திறந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ததற்காக மேனேஜர், ரெஸ்டாரண்ட் ஊழியர்கள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் காதலன் யார் தெரியுமா? – வைரலாகும் ரொமாண்டிக் போட்டோஸ்!

இது தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் கூறியிருப்பதாவது: நேற்று இரவு 1.30 மணி வரையில் ரெஸ்டாரண்ட் இயங்கியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிக சத்தத்துடன் கூடிய இசை ஒலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் ரெஸ்டாரண்ட் நள்ளிரவு 1.30 வரை திறந்திருந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இரவு 1 மணி வரையில் தான் ரெஸ்டாரண்ட் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் திறக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

விராட் கோலியின் ஒன்8 கம்யூன் ரெஸ்டாரண்ட் டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா என்று நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூருவில் உள்ள கஸ்தூரிபா சாலையிலுள்ள ரத்னம் காம்ப்ளக்ஸின் 6ஆவது மாடியில் ஒன்8 கம்யூன் ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டது. இது எம்.சின்னச்சுவாமி ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!