உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் - அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் பற்றி தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Jul 8, 2024, 7:57 PM IST

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடரில் அரையிறுதி போட்டிக்கு முதல் அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.


உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ், இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதே போன்று ஆஸ்திரேலியா, இந்தியா சாம்பியன்ஸ் அணிகள் விளையாடிய 3 போட்டியில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களை பிடித்தன.

மேலும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிகள் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் 11ஆவது போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியானது 2ஆவது அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணியானது 3ஆவது இடம் பிடிக்கும். கடைசி இடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

Tap to resize

Latest Videos

click me!