அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வில் ஐபிஎல் தொடரில் தொடக்க ஆண்டு முதல் ஒரே அணியில் விளையாடி வரும் வீரர் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. எனினும், இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலி தொடர் நாயகன் விருது கைப்பற்றியது சற்று ஆறுதல் கொடுத்தது. இந்த தொடரைத் தொடர்ந்து சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதில், விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், கேஎல் ராகுல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியானது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பெற்று விளையாடியது. இதில், இந்திய அணி 4-1 என்று டி20 தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, இந்திய அணியானது தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில், 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் தொடருக்கு கேஎல் ராகுல் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
India vs South Africa 1st T20I: ரிங்கு சிங் வேகமாக ஓட என்ன காரணம்? உண்மையை சொன்ன சுப்மன் கில்!
மேலும், டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒயிட்பால் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தற்காலிகமாக ஓய்வு கொடுத்துள்ளனர். ஆதலால், இருவரும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றுள்ளனர்.
A question related to King Kohli in AILET examination. pic.twitter.com/Jl1lDITasR
— Mufaddal Vohra (@mufaddal_vohra)
தென் ஆப்பிரிக்கா தொடரைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர் நடக்க இருக்கிறது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவார் என்று கருதப்படுகிறது. இந்த தொடரைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.
இதையடுத்து ஐபிஎல் 2024, டி20 உலகக் கோப்பை 2024 என்று அடுத்தடுத்து தொடர் நடக்க இருக்கிறது.இந்த நிலையில், இன்று அகிய இந்திய சட்ட நுழைவுத் தேர்வு நடந்துள்ளது. இதில், விராட் கோலி தொடர்பான ஒரு கேள்வியும் இடம் பெற்றுள்ளது. அதில், ஐபிஎல் தொடரில் 2008 ஆம் ஆண்டு முதல் ஒரே அணியில் விளையாடி வரும் வீரர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு டேவிட் வார்னர், விராட் கோலி, பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா என்று 4 Options கொடுக்கப்பட்டுள்ளது. இதில், சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும். சட்ட நுழைவுத் தேர்வில் விராட் கோலி தொடர்பான கேள்வி இடம் பெற்றிருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
WPL 2024 Auction: ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 5 வீராங்கனைகள்!