IPL Mini Auction 2023: சிஎஸ்கே அணியின் சிக்கல்களும் தீர்வுகளும்..! ஏலத்தில் யாரை எடுக்கும்..? ஓர் அலசல்

Published : Dec 22, 2022, 09:42 PM IST
IPL Mini Auction 2023: சிஎஸ்கே அணியின் சிக்கல்களும் தீர்வுகளும்..! ஏலத்தில் யாரை எடுக்கும்..? ஓர் அலசல்

சுருக்கம்

ஐபில் 16வது சீசனுக்கான மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்தெந்த இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும், யார் யாரை எடுக்க முற்படும் என்று பார்ப்போம்.  

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் நாளை(டிசம்பர் 23) கொச்சியில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். 10 அணிகளில் உள்ள 87 இடங்களை நிரப்ப நடத்தப்படும் ஏலத்தில் 405 வீரர்கள் போட்டி போடுகின்றனர்.

சிஎஸ்கே அணியில் எந்தெந்த இடங்களுக்கு வீரர்கள் இருக்கின்றனர், எந்தெந்த இடங்களை நிரப்ப வேண்டியிருக்கிறது, சிஎஸ்கே அணியின் பிரச்னை என்ன ஆகியவை குறித்து ஆய்வு செய்வோம்.

சிஎஸ்கே அணியின் கையிருப்பில் ரூ.20.45 கோடி உள்ளது. சிஎஸ்கே அணி ஏலத்தில் 7 வீரர்களை எடுக்கலாம். 2 வெளிநாட்டு வீரர்களை எடுக்க முடியும். 

IPL Mini Auction 2023: எத்தனை மணிக்கு எந்த சேனலில் பார்க்கலாம்? வீரர்கள் பட்டியல்.. அணிகளின் கையிருப்பு தொகை

சிஎஸ்கே அணி தக்கவைத்த வீரர்கள்:

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் - ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, சுப்ரன்ஷு சேனாபதி.

ஃபினிஷர்கள் - அம்பாதி ராயுடு, தோனி

ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ட்வைன் பிரிட்டோரியஸ்

ஸ்பின்னர்கள் - மிட்செல் சாண்ட்னெர், மஹீஷ் தீக்‌ஷனா, பிரசாந்த் சோலங்கி

ஃபாஸ்ட் பவுலர்கள் - தீபக் சாஹர், முகேஷ் சௌத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பதிரனா. 

சிஎஸ்கே அணியின் சிக்கல்கள் &  தேவைகள்:

ஐபிஎல் 2022ல் டெத் ஓவர்களில் மோசமாக பந்துவீசியதில் 2வது இடத்தில் இருக்கும் அணி சிஎஸ்கே. டெத் ஓவர்களில் முகேஷ் சௌத்ரி, பிரிட்டோரியஸ் ஆகிய இருவரும் நிறைய ரன்களை வழங்கினர். தீபக் சாஹர் பெரும்பாலும் பவர்ப்ளேயில் பந்துவீசுவதால், அவர் வீசிய பந்துகளில் டெத் ஓவர்களில் வெறும் 10.3% மட்டுமே வீசியிருக்கிறார். சிஎஸ்கே அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ட்வைன் பிராவோ, கடந்த சீசனில் டெத் ஓவர்களில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், அடுத்த சீசனில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஒரு பவுலர் தேவை. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் இடம்பெற்று 2020 மற்றும் 2021 ஆகிய 2 சீசன்களில் அபாரமாக ஆடியிருக்கிறார். டி20 உலக கோப்பையிலும் டெத் ஓவர்களில் அபாரமாக பந்துவீசி இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வெல்ல உதவினார்.

எனவே சிஎஸ்கே அணி சாம் கரனை ஏலத்தில் எடுக்கும். இலங்கை ஃபாஸ்ட் பவுலர் மதீஷா பதிரனா, 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய பவுலர். அவர் அணியில் இருப்பது கூடுதல் பலம். எனவே சாம் கரனை எடுத்தால் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் பூர்த்தியடைந்துவிடும். 

இம்ரான் தாஹிருக்கு பிறகு சிஎஸ்கே அணி ரிஸ்ட் ஸ்பின்னருக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. மிட்செல் சாண்ட்னெர் மற்றும் மஹீஷ் தீக்‌ஷனா ஆகிய இருவரும் தான் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள். கூடுதலாக ரிஸ்ட் ஸ்பின்னர் பிரசாந்த் சோலங்கி இருக்கிறார். அவரையும் பயன்படுத்துவார்கள்.

IPL 2023 Mini Auction: விலை போக வாய்ப்பே இல்லாத 5 வெளிநாட்டு வீரர்கள்

சிஎஸ்கே அணி தமிழ்நாடு வீரர்களான நாராயண் ஜெகதீசன் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகிய இருவரையும் விடுவித்தது. அம்பாதி ராயுடு அணியில் இருக்கிறார். மிடில் ஆர்டரை வலுப்படுத்த வேண்டிய அவசியம் சிஎஸ்கே அணிக்கு உள்ளது. விஜய் ஹசாரே தொடரில் அபாரமாக ஆடி ஒரு இரட்டை சதம் உட்பட தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசி வரலாற்று சாதனை படைத்த நாராயண் ஜெகதீசனை எடுத்து மிடில் ஆர்டரை வலுப்படுத்த சிஎஸ்கே முனையும்.

சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ள வீரர்கள்:

சாம் கரன், நாராயண் ஜெகதீசன், அடில் ரஷீத், ஃபில் சால்ட், ஆடம் ஸாம்பா, ஆடம் மில்னே, மனீஷ் பாண்டே, ரோஹன் குன்னுமால், சிக்கந்தர் ராசா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!