அந்த வீரரை எப்படி நீங்க நீக்கலாம்..? கேப்டன் ராகுல், பயிற்சியாளர் டிராவிட்டை கிழி கிழினு கிழித்த கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Dec 22, 2022, 7:07 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 8 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவை 2வது டெஸ்ட்டில் பென்ச்சில் உட்காரவைத்ததற்காக, இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
 

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மொத்தமாக 8 விக்கெட் வீழ்த்தி முதல் டெஸ்ட்டில் ஆட்டநாயகன் விருதை வென்ற குல்தீப் யாதவ், 2வது டெஸ்ட்டில் நீக்கப்பட்டார்.  2வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெய்தேவ் உனாத்கத் சேர்க்கப்பட்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம்..! புதிய தலைவர் நியமனம்

2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 227 ரன்களுக்கு சுருண்டது. உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜெய்தேவ் உனாத்கத் 2 விக்கெட் வீழ்த்தினார்.

முதல் டெஸ்ட்டில் அபாரமாக பந்துவீசி ஆட்டநாயகன் விருதை வென்ற குல்தீப் யாதவை 2வது டெஸ்ட்டில் பென்ச்சில் உட்காரவைத்ததை கடுமையாக விமர்சித்துள்ளார் கவாஸ்கர்.

இந்திய அணியில் இடத்தை இழந்த வெறியில் ஆடி இரட்டை சதமடித்த ரஹானே.. ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இன்னிங்ஸ் வெற்றி

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், முதல் டெஸ்ட்டில் ஆட்டநாயகன் விருது வென்ற குல்தீப் யாதவை நீக்கியதை என்னால் நம்பவே முடியவில்லை. மரியாதையான வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால், உண்மையாகவே என்னால் நம்ப முடியவில்லை. இதைவிட கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்க முடியும். ஆனால் அதை செய்ய நான் விரும்பவில்லை. முதல் டெஸ்ட்டில் 20 விக்கெட்டில் 8 விக்கெட்டை வீழ்த்த குல்தீப்பை எப்படி உட்காரவைக்கலாம்? இன்னும் 2 ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை உட்கார வைத்திருக்கலாம். கண்டிப்பாக குல்தீப்பை நீக்கியிருக்கக்கூடாது என்றார் கவாஸ்கர்.
 

click me!