IPL Mini Auction 2023: மும்பை அணியிடம் தரமான ஸ்பின்னர் இல்லை! இவர்களில் ஒருவரை எடுக்கலாம்.. கும்ப்ளே ஆலோசனை

By karthikeyan V  |  First Published Dec 19, 2022, 10:16 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தரமான ஸ்பின்னர் இல்லாத நிலையில், அந்த அணி யாரை எடுக்கலாம் என்று முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னரும் ஐபிஎல்லில் ஆடிய மற்றும் பயிற்சியளித்த அனுபவமும் கொண்ட அனில் கும்ப்ளே ஆலோசனை கூறியுள்ளார்.
 


ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் வரும் 23ம் தேதி கொச்சியில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து தெளிவுடன் உள்ளனர்.

5 முறை சாம்பியனும், வலுவான கோர் கட்டமைப்பை கொண்ட அணியுமான மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனில் பிளே ஆஃபிற்குக்கூட முன்னேறாமல் வெளியேறியது. அதற்கு அந்த அணியிடம் தரமான டாப் ஸ்பின்னர் இல்லாததும் ஒரு காரணம். அந்தவகையில், ஒரு டாப் ஸ்பின்னரை அணிக்குள் கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி எந்த ஸ்பின்னரை ஏலத்தில் எடுக்கலாம் என்று அனில் கும்ப்ளே ஆலோசனை கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

PAK vs ENG: டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று படுதோல்வி அடையும் பாகிஸ்தான்..! பட்டைய கிளப்பிய இங்கிலாந்து

இதுகுறித்து பேசிய அனில் கும்ப்ளே, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தரமான டாப் ஸ்பின்னர் ஒருவர் இல்லை. கடந்த சீசனில் குமார் கார்த்திகேயா அந்த அணிக்கு நன்றாக செயல்பட்டார். இந்தியாவை சேர்ந்த அனுபவம் வாய்ந்த சீனியர் ஸ்பின்னர் தேவை என்றால், அமித் மிஷ்ரா அல்லது பியூஷ் சாவ்லா ஆகியோரில் ஒருவரை எடுக்கலாம். ஒருவேளை வெளிநாட்டு ஸ்பின்னரை எடுப்பதென்றால், அடில் ரஷீத், டப்ரைஸ் ஷம்ஸி, ஆடம் ஸாம்பா ஆகியோரில் ஒருவராக இருக்கலாம். 

ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசாவும் நல்ல ஆப்சனாக இருப்பார். மிடில் ஆர்டரில் பேட்டிங்கும் ஆடுவார். ஸ்பின் பவுலிங்கும் வீசுவார்.  அண்மைக்காலமாக சிறப்பாக ஆடி அசத்தியிருக்கிறார். எனவே அவரும் சிறப்பான ஆப்சனாக இருப்பார் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

மினி ஏலத்திற்கு முன்பாக 13 வீரர்களை விடுவித்த மும்பை இந்தியன்ஸிடம் ரூ.20.55 கோடி கையிருப்பில் உள்ளது.

IPL 2023: ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் விடுவித்த வீரர்கள்:

கைரன் பொல்லார்டு, அன்மோல்ப்ரீத் சிங், ஆர்யன் ஜுயால், பாசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனாத்கத்,  மயன்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரைலீ மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்.
 

click me!