BBL: சைனாமேன் பாட்ரிக் அபார பவுலிங்.. பெர்த் ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் வெற்றி

By karthikeyan VFirst Published Dec 19, 2022, 5:38 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை 8 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வெற்றி பெற்றது. 
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி:

பென் மெக்டெர்மாட், டார்ஷி ஷார்ட், மேத்யூ வேட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், டிம் டேவிட், ஆசிஃப் அலி, ஜேம்ஸ் நீஷம், ஜோயல் பாரிஸ், நேதன் எல்லிஸ், பாட்ரிக் டூலே, ரைலி மெரிடித்.

PAK vs ENG: 2வது இன்னிங்ஸில் அறிமுக ஸ்பின்னர் ரெஹான் அகமதுவிடம் சரணடைந்த பாக்.,! இங்கிலாந்துக்கு எளிய இலக்கு

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி:

ஆடம் லித், ஃபாஃப் டுப்ளெசிஸ், நிக் ஹாப்சன், ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் டர்னர் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, அஷ்டான் அகர், ஜெய் ரிச்சர்ட்ஸன், ஆண்ட்ரூ டை, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் பீட்டர் ஹட்ஸோக்லு.

முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷார்ட் 25 பந்தில் 35 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் பேட்டிங் ஆடிய கேப்டன் மேத்யூ வேட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 29 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் அடித்தார். டிம் டேவிட் 28 பந்தில் 46 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 172 ரன்கள் அடித்தது.

173 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஃபாஃப் டுப்ளெசிஸ் அதிரடியாக ஆடி 16 பந்தில் 32 ரன்களை விளாசினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஜோஷ் இங்லிஸ் 37 பந்தில் 62 ரன்கள் அடித்து 16வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அஷ்டான் அகர், ஹார்டி, ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 164 ரன்கள் அடித்து 8 ரன் வித்தியாசத்தில் தோற்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி.

BAN vs IND: 2வது டெஸ்ட்டிலிருந்தும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விலகல்

4 ஓவரில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார், இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் சைனாமேன் பவுலர் பாட்ரிக் டூலே.

click me!