IND vs NZ: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு..! கேப்டன் வில்லியம்சனுக்கு ஓய்வு

By karthikeyan VFirst Published Dec 19, 2022, 3:51 PM IST
Highlights

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

நியூசிலாந்து அணி டிசம்பர் 26 முதல் ஜனவரி 14 வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேரடியாக இந்தியாவிற்கு வரும் நியூசிலாந்து அணி, ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

BAN vs IND: 2வது டெஸ்ட்டிலிருந்தும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விலகல்

இந்த 2 ஒருநாள் தொடர்களுக்குமான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கு இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவிற்கு எதிரான தொடரில் டாம் லேதம் கேப்டன்சி செய்கிறார்.

ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, ஃபெர்குசன், மாட் ஹென்ரி, ஆடம் மில்னே, க்ளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர் ஆகிய வழக்கமான வீரர்கள் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர். ஹென்ரி ஷிப்ளி என்ற ஃபாஸ்ட் பவுலர் முதல் முறையாக நியூசிலாந்து அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி:

டாம் லேதம் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி ஃபெர்குசன், மாட் ஹென்ரி, ஆடம் மில்னே, டேரைல் மிட்செல், ஹென்ரி நிகோல்ஸ், க்ளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், ஹென்ரி ஷிப்ளி இஷ் சோதி.

ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. ஃபைனலுக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வில்லியம்சன் கேப்டன்சி செய்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான அணியில் மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி ஆகிய வீரர்கள் இல்லை. டிம் சௌதி பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுகிறார்.

click me!