AUS vs SA: 91 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த அரிதினும் அரிதான சம்பவம்

By karthikeyan VFirst Published Dec 18, 2022, 10:23 PM IST
Highlights

91 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள்ளாக முடிவடைந்திருக்கிறது. 
 

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. இந்த போட்டி வெறும் 2 நாட்களில் முடிந்தது. பொதுவாக துணைக்கண்ட ஆடுகளங்கள் மற்றும் கண்டிஷன் காரணமாக இதுமாதிரி 2-3 நாட்களில் டெஸ்ட் போட்டிகள் முடிவதை பார்த்திருக்கிறோம்.

IPL Mini Auction 2023: அடிப்படை விலை வாரியாக ஏலத்தில் இடம்பெறும் மொத்த வீரர்களின் லிஸ்ட்

ஆனால் ஆஸ்திரேலியாவில் கடந்த சுமார் நூற்றாண்டுகளில்  2 நாட்களுக்குள் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி இதுதான். ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையே பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 218 ரன்கள் அடித்தது.

66 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எனவே வெறும் 33 ரன்கள் மட்டுமே தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றதால், 34 ரன்கள் என்ற இலக்கை 8 ஓவரில் அடித்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.  டிசம்பர் 17ம் தேதி தொடங்கிய போட்டி 18ம் தேதியே முடிவடைந்தது.

IPL Mini Auction 2023: மினி ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 3 வீரர்கள்..!

ஆஸ்திரேலிய மண்ணில் 91 ஆண்டுகளாக இப்படியொரு சம்பவம் நடந்ததேயில்லை. 91 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்தது.
 

click me!