வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்தும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது.
ஒருநாள் தொடரின்போது கை கட்டைவிரலில் காயமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட்டில் ஆடவில்லை. அந்த போட்டியில் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்தார். ரோஹித்துக்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் வழங்கப்படவில்லை. ராகுலும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரராக இறங்கினர்.
ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. ஃபைனலுக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு
முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்ரி பெற்று இந்த தொடரில் 1-0 என முன்னிலை பெற்றதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கும் முன்னேறியது.
அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற அடுத்த டெஸ்ட்டிலும் ஜெயித்தாக வேண்டும். முதல் டெஸ்ட்டில் ஆடாத கேப்டன் ரோஹித் சர்மா முழு ஃபிட்னெஸுடன் 2வது டெஸ்ட்டில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் முழுமையாக குணமடையாததால் ரோஹித் சர்மாவை ஆடவைப்பது ரிஸ்க் என்பதால், 2வது டெஸ்ட்டிலிருந்தும் ரோஹித் சர்மா விலகியுள்ளார்.
IPL 2023 Mini Auction: விலை போக வாய்ப்பே இல்லாத 5 வெளிநாட்டு வீரர்கள்
எனவே ரோஹித் சர்மா 2வது டெஸ்ட்டிலும் ஆடமாட்டார். கேஎல் ராகுலே கேப்டனாக செயல்படுவார்.