ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்தில், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லில் ஒரு போட்டியில் கூட ஆடிராத முகேஷ் குமார் என்ற ஃபாஸ்ட் பவுலரை டெல்லி கேபிடள்ஸ் அணி ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் கொச்சியில் நடந்துவருகிறது. இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு அதிக கிராக்கி இருந்தது. இங்கிலாந்து ஆல்ரவுண்டரும் டி20 உலக கோப்பையின் தொடர் நாயகனுமான சாம் கரன் ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்சமாக ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் ஏடுக்கப்பட்டார்.
பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்தது. ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை ரூ.17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் எடுத்தது. இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி எடுத்தது. மயன்க் அகர்வால் ரூ.8.25 கோடிக்கு விலைபோனார்.
IPL 2023 Auction: சன்ரைசர்ஸ் அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்..! முத்தையா முரளிதரன் தகவல்
இந்த ஏலத்தில் டெல்லி கேபிடள்ஸ் அணி மனீஷ் பாண்டேவை ரூ.2.4 கோடிக்கும், ஃபிலிப் சால்ட்டை ரூ.2 கோடிக்கும், இஷாந்த் சர்மாவை அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கும் எடுத்தது. முகேஷ் குமார் என்ற 29 வயது ஃபாஸ்ட் பவுலரை அதிகபட்சமாக ரூ.5.5 கோடி கொடுத்து எடுத்தது.
ரூ.20 லட்சத்தை அடிப்படையாக கொண்ட முகேஷ் குமாருக்கு டெல்லி கேபிடள்ஸுடன் சில அணிகள் போட்டி போட்டன. ஆனால் முகேஷ் குமாரை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் அவரை கண்டிப்பாக எடுத்தே தீரவேண்டும் என்ற உறுதியில் இருந்த டெல்லி கேபிடள்ஸ் அணி ரூ.5.5 கோடிக்கு எடுத்தது.
சர்வதேச கிரிக்கெட்டிலோ, ஐபிஎல்லிலோ ஒரு போட்டியில் கூட ஆடிராத பெங்கால் வீரரான முகேஷ் குமாரை டெல்லி கேபிடள்ஸ் அணி ரூ.5.5 கோடிக்கு எடுத்தது. முதல் தர கிரிக்கெட்டில் 30 போட்டிகளில் ஆடி 109 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 18 போட்டிகளில் ஆடி 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள முகேஷ் குமார், 17 டி20 போட்டிகளில் ஆடி 19 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்த 17 டி20 போட்டிகளும் சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆடியவை.
IPL 2023 Mini Auction: நம்பர் 1 டி20 ஆல்ரவுண்டர் ஏலத்தில் விலைபோகாத கொடுமை
டெல்லி கேபிடள்ஸ் அணியின் நெட் பவுலராக இருந்த அவரை ஏலத்தில் ரூ.5.5 கோடிக்கு எடுத்தது குறித்து பேசிய அந்த அணியின் உரிமையாளர், முகேஷ் குமார் எங்கள் அணியின் நெட் பவுலராக இருந்தார். வலையில் அருமையாக பந்துவீசினார். அவரது பவுலிங் ரிக்கி பாண்டிங், ரிஷப் பண்ட்டை கவர்ந்தது. அதனாலும், எங்கள் அணியின் நெட் பவுலராகவும் சிறந்த பங்களிப்பை செய்த முகேஷ் குமாரை அங்கீகரிக்கும் விதமாகவும், அவரது திறமையை களத்தில் காட்ட வழிவக்கும் விதமாகவும் அவரை அணியில் எடுத்ததாக தெரிவித்தார்.
டெல்லி கேபிடள்ஸ் அணியில் நெட் பவுலராக இருந்த முகேஷ் குமார், வலைப்பயிற்சியில் தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி வந்தார். நன்றாக ஸ்விங் செய்து வீசக்கூடியவர். நெட்டில் முகேஷ் குமாரின் பவுலிங்கில் கவரப்பட்டார் டெல்லி கேபிடள்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வீரர்கள் மற்றும் கேப்டன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங், திறமைசாலிகளை எளிதாக அடையாளம் காணக்கூடியவர். அந்தவகையில், நெட்டில் முகேஷ் குமாரின் பவுலிங்கை கண்டு, இவர் களத்திலும் ஜொலிக்கக்கூடிய பவுலர் என்பதால் அவரை ஏலத்தில் எடுக்க பரிந்துரைத்துள்ளார்.
IPL Mini Auction 2023: ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச தொகைக்கு விலைபோன சாம் கரன்..! வரலாற்று சாதனை
ஏற்கனவே டெல்லி கேபிடள்ஸ் அணியில் அன்ரிக் நோர்க்யா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், கலீல் அகமது, சேத்தன் சக்காரியா ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் இருக்கும் நிலையில், முகேஷ் குமார் அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டிற்கு வலுசேர்ப்பார்.