ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அடுத்த கேப்டன் யார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் கொச்சியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கேப்டன் உறுதியாகாமல் இந்த ஏலத்திற்கு வந்த ஒரே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தான்.
2018லிருந்து 2022 வரை 5 சீசன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்ட கேன் வில்லியம்சனை விடுவித்தது அந்த அணி. வில்லியம்சன் ஒரு கேப்டனாக அந்த அணியை சிறப்பாக வழிநடத்தியபோதிலும், கடந்த சீசனில் அவரது ஸ்டிரைக் ரேட் விமர்சனத்துக்குள்ளானது.
IPL 2023 Mini Auction: நம்பர் 1 டி20 ஆல்ரவுண்டர் ஏலத்தில் விலைபோகாத கொடுமை
எனவே அவரது பேட்டிங்கை கருத்தில்கொண்டு அவரை விடுவித்தது சன்ரைசர்ஸ் அணி. அதனால் அடுத்த கேப்டனை உறுதி செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே அந்த அணியை அவ்வப்போது வழிநடத்திய அனுபவம் கொண்ட புவனேஷ்வர் குமார், தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் ஆகியோர் கேப்டன்சி ஆப்சன்களாக இருந்த நிலையில், ஏலத்தில் மயன்க் அகர்வாலை எடுத்தது சன்ரைசர்ஸ் அணி.
இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக்கை ரூ.13.25 கோடிக்கும், மயன்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கும் எடுத்த சன்ரைசர்ஸ் அணி, ஹென்ரிச் கிளாசன், அடில் ரஷீத், மயன்க் மார்கண்டே ஆகிய வீரர்களையும் எடுத்தது.
IPL Mini Auction 2023: குஜராத் டைட்டன்ஸ் செம ஸ்மார்ட்.. அடக்கத்துடன் அமைதியான, தெளிவான செயல்பாடு
மயன்க் அகர்வால் ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர் என்பதால் அவரும் கேப்டன்சிக்கான போட்டியில் இணைந்தார். எனவே சன்ரைசர்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஏலத்திற்கு இடையே ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய சன்ரைசர்ஸ் பவுலிங் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், ஏற்கனவே வில்லியம்சன் ஆடாத போட்டிகளில் புவனேஷ்வர் குமார் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். எனவே அவரே கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இது நான் மட்டும் எடுக்கும் முடிவல்ல. அணி நிர்வாகம் இதுகுறித்து ஆலோசித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றார் முரளிதரன்.
IPL Mini Auction 2023: ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச தொகைக்கு விலைபோன சாம் கரன்..! வரலாற்று சாதனை