சதத்தை கோட்ட விட்ட ரிஷப், ஷ்ரேயாஸ்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 314 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumarFirst Published Dec 23, 2022, 5:15 PM IST
Highlights

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் எடுத்தது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒரு நாள் தொடரை 1-2 என்று இழந்த நிலையில், தற்போது டெஸ்ட் போட்டியில் 1-0 என்று முன்னிலையுடன் 2ஆவது டெஸ்டில் விளையாடி வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் ஆடியது. அதன்படி, ஆடிய வங்கதேச அணி 227 சேர்த்தது. இதில், அதிகபட்சமாக மோமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர்  தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர். உனட்கட் 2 விக்கெட் கைப்பறினார்.

மீண்டும் ட்ரெண்டாகும் காவ்யா மாறன்… மீம்ஸ் வெள்ளத்தில் மூழ்கிய டிவிட்டர்!!

பின்னர் ஆடிய இந்திய அணியில் ராகுல் (10), கில் (20), புஜாரா (24), விராட் கோலி (24) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி வங்கதேச வீரர்களை பவுண்டரி எல்லையிலேயே வைத்திருந்தனர். இருவரும், பவுண்டரியும், சிக்சருமாக விளாசித் தள்ளினர். அதிரடியாக ஆடிய  ரிஷப் பந்த் 105 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 93 ரன்கள் சேர்த்து மெஹிடி பந்தில் நூருல் ஹாசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த அக்‌ஷர் படேல் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதிவேகமாக அரைசதம் அடித்த அசால்ட் மன்னன் ரிஷப் பண்ட்!

ஒருபுறம் ரன்கள் குவித்துக் கொண்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 105 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 87 ரன்கள் சேர்த்து ஷகில் அல் ஹசன் ஓவரில் எல்பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அஸ்வின் (12), உமேஷ் யாதவ் (14), சிராஜ் (7) என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 86.3 ஓவர்களில் 314 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சில் ஷகிப் அல் ஹசன் மற்றும் டைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், மெஹிடி, டஸ்கின் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

கேட்ச் பிடிக்க டைவ் அடித்த மெஹிடி: பஞ்சரான மூக்கு!

இதன் மூலம் இந்திய அணி 87 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்கள் முடிவில் 7 ரன்கள் எடுத்தது. ஷாண்டோ 5 ரன்களுடனும், ஷகிர் ஷசன் 2 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

click me!