IPL Mini Auction 2023: குஜராத் டைட்டன்ஸ் செம ஸ்மார்ட்.. அடக்கத்துடன் அமைதியான, தெளிவான செயல்பாடு

By karthikeyan VFirst Published Dec 23, 2022, 4:54 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்திற்கு ரூ.19.25 கோடியுடன் வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, அவசரமோ ஆவேசமோ அடையாமல் மிக நிதானமாகவும் தெளிவாகவும் ஸ்மார்ட்டாக செயல்பட்டுவருகிறது. 
 

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள் சாம் கரன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிகமான தொகைக்கு விலைபோனார்கள். சாம் கரனை உச்சபட்சமாக ரூ.18.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்தது. பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே அணி ரூ.16.25 கோடிக்கும், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் ரூ.17.5 கோடிக்கும் எடுத்தன.

நிகோலஸ் பூரன், மயன்க் அகர்வால் ஆகிய வீரர்களையும் அணிகள் அதிகமான தொகைக்கு எடுத்தன. சன்ரைசர்ஸ் அணி அதிகபட்சமாக ரூ.42 கோடியுடன் ஏலத்திற்கு சென்றதால் துணிந்து அதிக தொகைக்கு தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்தது.

IPL Mini Auction 2023: ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச தொகையை கொடுத்து பென் ஸ்டோக்ஸை எடுத்த சிஎஸ்கே

ஆனால் சிஎஸ்கே, மும்பை அணிகள் ஆல்ரவுண்டர் தேவை என்ற வகையில் தங்களிடம் இருந்த ரூ.20 கோடியில் ரூ.16-17 கோடியை ஒரு வீரருக்கு மட்டுமே செலவழித்தன.

அனைத்து அணிகளும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்க, ரூ.10 கோடிக்கும் குறைவாக ஏலத்திற்கு சென்ற ஆர்சிபி, கேகேஆர் அணிகள் அமைதி காக்கின்றன. ஆனால் ரூ.19.25 கோடியை வைத்திருந்தும் கூட, ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிக நிதானமாகவும் தெளிவாகவும் செயல்படுகிறது நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி.

எந்த அணியுமே ஆர்வம் காட்டாத, சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரும் கேப்டன்களில் ஒருவருமான கேன் வில்லியம்சனை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கும், வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஒடீன் ஸ்மித்தை அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கும் எடுத்தது. கேன் வில்லியம்சன் கண்டிப்பாகவே ரூ.2 கோடிக்கு எடுத்தது மிகச்சிறந்த தேர்வு. அதேபோல பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பங்களிப்பு செய்யக்கூடிய ஒடீன் ஸ்மித்தையும் ரூ.50 லட்சத்திற்கு தட்டி தூக்கியது குஜராத் அணி.

வெளிநாட்டை சேர்ந்த பெரிய வீரர்களுக்கு கோடிகளை கொட்டிக்கொடுக்காமல், குறைவான அடிப்படை விலைப்பிரிவில் இருக்கும் இந்தியாவை சேர்ந்த இளம் திறமையான வீரர்களை அணியில் எடுக்கும் முனைப்பில் நிதானம் காக்கிறது ஆஷிஷ் நெஹ்ரா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம். 

IPL Mini Auction 2023: ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச தொகைக்கு விலைபோன சாம் கரன்..! வரலாற்று சாதனை

ஏற்கனவே ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியில், கில், டேவிட் மில்லர், சாய் சுதர்சன், ராகுல் டெவாட்டியா, மேத்யூ வேட் ஷமி, அல்ஸாரி ஜோசஃப் என கோர் அணி வலுவாக இருப்பதால் பதற்றமில்லாமல் நிதானமாக செயல்படுகிறது அந்த அணி.

குஜராத் டைட்டன்ஸ் தக்கவைத்த வீரர்கள்:

 ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், ரிதிமான் சஹா, மேத்யூ வேட், ரஷீத் கான், ராகுல் டெவாட்டியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்ஸாரி ஜோசஃப், யஷ் தயால், பிரதீப் சங்வான், தர்ஷன் நால்கண்டே, ஜெயந்த் யாதவ், சாய் கிஷோர், நூர் அகமது.

IPL Mini Auction 2023: ஹாரி ப்ரூக்கிற்காக அடித்துக்கொண்ட SRH - RR.! பெரிய தொகைக்கு தட்டி தூக்கிய சன்ரைசர்ஸ்

click me!