India vs Nepal: ஆசிய கோப்பை வரலாற்றில் விராட் கோலி, குமார் சங்கக்காரா சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!

By Rsiva kumar  |  First Published Sep 5, 2023, 12:32 AM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் எடுத்த அதிக ரன்கள் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.


இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையான ஆசிய கோப்பை 2023 தொடரின் 5ஆவது லீக் போட்டி இன்று பல்லேகலே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய நேபாள் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 58 ரன்களும், சோம்பால் கமி 48 ரன்களும், குஷால் புர்டெல் 38 ரன்களும் எடுத்தனர்.

வான வேடிக்கை காட்டிய ரோகித் சர்மா, சுப்மன் கில்: இந்தியா வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற்றம்!

Tap to resize

Latest Videos

பின்னர் 231 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. இதில், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் விளையாடினர். போட்டியின் 2.1 ஓவர்களில் இந்திய அணி 17 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்த நிலையில் 23 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. அதோடு, இந்திய அணி 143 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதோடு 1-5 ஓவர்கள் முதல் பவர்பிளே ஓவர்களாகவும், 6-19 2ஆவது பவர்பிளே ஓவர்களாகவும், 20-23 3ஆவது பவர்பிளே ஓவர்களாகவும் மாற்றப்பட்டது. மேலும், 3 பந்து வீச்சாளர்கள் 5 ஓவர்கள் வரையிலும் 2 பந்து வீச்சாளர்கள் 4 ஓவர்கள் வரையிலும் பந்து வீச அனுமதிக்கப்பட்டனர்.

Rain:இரவு 10.20 மணிக்குள் போட்டி நடக்கவில்லை என்றால், போட்டி ரத்து, சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதி பெறும்!

இதையடுத்து மைதானத்திற்குள் வந்த ரோகித் சர்மா தனது மொத்த கோபத்தையும் நேபாள் பந்து வீச்சாளர்கள் மீது காட்டினார். ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். அவருக்கு பக்கபலமாக சுப்மன் கில் இருந்தார். சர்மா 39 பந்துகளில் தனது 49ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலமாக விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி 1046 ரன்கள் எடுத்திருந்தார். இந்த சாதனையையும் முறியடித்து, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காராவின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

India vs Nepal: கோலி கோலி என்று கோஷமிட்ட ரசிகர்கள்; நடுவிரலை உயர்த்தி காட்டிய கௌதம் காம்பீரால் சர்ச்சை!

ரோகித் சர்மா ஆசிய கோப்பை வரலாற்றில் 33 போட்டிகளில் 1080 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்திருக்கிறார். தொடக்க வீரராக 250 சிக்ஸர்கள் அடித்து சாதித்து காட்டியிருக்கிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக முறை அரைசதம் அடித்த வீரரும் இவரே. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 10 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரரும் இவரே.

ஆசிய கோப்பையில் (ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில்) அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

சனத் ஜெயசூர்யா – 1220 ரன்கள் 25 போட்டிகள்

ரோகித் சர்மா – 1080 ரன்கள் 33 போட்டிகள்

குமார் சங்கக்காரா – 1075 ரன்கள் 24 போட்டிகள்

விராட் கோலி – 1046 ரன்கள் 23 போட்டிகள்

சச்சின் டெண்டுல்கர் – 971 ரன்கள் 23 போட்டிகள்

இதே போன்று 47 பந்துகளில் கில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் இருவரும் கடைசி வரை நின்று அதிரடியாக ஆடினர். இறுதியாக 20.1 ஆவது ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 147 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியில் ரோகித் சர்மா 59 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உடன் 74 ரன்களுடனும் (நாட் அவுட்), சுப்மன் கில் 62 பந்துகளில்  8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 67 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். இது அவரது 22ஆவது ஒரு நாள் போட்டியில் அவர் பெறும் ஆட்டநாயகன் விருதாகும்.

லட்டு கேட்சை கோட்டைவிட்டு, ஒரு கையால் கேட்ச் பிடித்த கோலி; ஒருநாள் கிரிக்கெட்டில் 143 கேட்ச் பிடித்து அசத்தல்!

அதோடு, சூப்பர் 4 சுற்றுக்கும் இந்தியா முன்னேறியது. வரும் 10 ஆம் தேதி நடக்கும் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது, கொழும்புவில் நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மழை எதிரொளி காரணமாக போட்டியானது வேறொரு மைதானத்திற்கும் மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது, நிலவுக்கு மேல் இருக்கிறோம் – அங்கத் ஜஸ்ப்ரித் பும்ராவை வரவேற்ற கிரிக்கெட்டர்!

click me!