இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் 5ஆவது லீக் போட்டியில் நேபாள் அணி முதலில் பேட்டிங் ஆடி 230 ரன்கள் எடுத்தது. பின்னர், 231 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி பேட்டிங் ஆடி வந்தது. ஆனால், 2.1 ஓவர்களில் இந்திய அணி 17 ரன்கள் எடுத்திருந்த போது போட்டியானது மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில், போட்டி ஓவர்கள் குறைக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. அதோடு, போட்டி கைவிடப்படவும் வாய்ப்பிருக்கிறது.
போட்டியானது 45 ஓவர்களாக குறைக்கப்பட்டால் 225 ரன்களும், 40 ஓவர்களாக இருந்தால் 207 ரன்களும், 35 ஓவர்களாக இருந்தால் 192 ரன்களும், 30 ஓவர்களாக இருந்தால் 174 ரன்களும், 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருந்தால் 130 ரன்களும் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்படும். ஒருவேளை மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும். அப்படி பகிர்ந்து அளிக்கப்பட்டால் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் கிடைக்கும்.
India vs Nepal: ஜடேஜாவை வச்சு ஸ்கெட்ச் போட்டு நேபாள் வீரர்களை தூக்கிய ரோகித் சர்மா!
இதன் காரணமாக இந்திய அணி 2 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். நேபாள் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு 10.20 மணிக்குள்ளாக போட்டி நடத்தப்படவில்லை என்றால் போட்டி ரத்தாகும். இரவு 11.36 மணி தான் கடைசி நேரமாகும்.