இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நேபாள் அணி 48.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று பல்லேகலே மைதானத்தில் இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான 5ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி நேபாள் அணி முதலில் பேட்டிங் ஆடிய 230 ரன்கள் குவித்தது. இதில், தொடக்க வீரர் ஆசிப் ஷேக் ஒரு ரன் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை விராட் கோலி கோட்டைவிட்டார்.
India vs Nepal: ஜடேஜாவை வச்சு ஸ்கெட்ச் போட்டு நேபாள் வீரர்களை தூக்கிய ரோகித் சர்மா!
அவர், 97 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் குஷால் புர்டெல் 38 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். கடைசியாக வந்த சோம்பால் கமி 56 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்ஸர்கள் உள்பட 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியாக நேபாள் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் குவித்தது. இதற்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிக்கு எதிரான முதல் போட்டியில் நேபாள் 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், இந்திய அணியிடம் நேபாள் அணி 230 ரன்கள் குவித்துள்ளது.
பந்து வீச்சு தரப்பில் ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணியில் பீல்டிங் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தொடக்கத்திலேயே இந்திய வீரர்கள் முக்கியமான கேட்சுகளை கோட்டைவிட்டனர். கேட்ச் மட்டுமின்றி பவுண்டரிகளையும் நழுவவிட்டனர். ரோகித் சர்மாவே விர்கதியடையும் அளவிற்கு இந்திய வீரர்களின் பீல்டிங் இன்றைய போட்டியில் அமைந்துவிட்டது. ரன் அவுட் என்ற பெயரில் எக்ஸ்ட்ரா ரன்களும் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.