ரவீந்திர ஜடேஜாவை வைத்து நேபாள் வீரர்களை அடுத்தடுத்த காலி செய்த ரோகித் சர்மாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான 5ஆவது ஆசிய கோப்பை லீக் போட்டி தற்போது பல்லேகலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி நேபாள் அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில், தொடக்க வீரர்களாக குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் இருவரும் களமிறங்கினர். இதில், முதல் ஓவரிலேயே குஷால் புர்டெல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷ்ரேயாஸ் ஐயர் கோட்டைவிட்டார்.
இரண்டாவது ஓவரில் ஆசிப் ஷேக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விராட் கோலி கோட்டைவிட்டார். அடுத்து புர்டெல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இஷான் கிஷான் கோட்டைவிட்டார். இப்படி முதல் 5 ஓவரிலேயே நேபாள் வீரர்கள் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்புகளை இந்திய வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, இஷான் கிஷான் என்று ஒவ்வொருவரும் கோட்டைவிட்டனர். மேலும், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஓவர்களில் அதிக பவுண்டரியும், சிக்ஸரும் விளாசவே ரோகித் சர்மா ஷர்துல் தாக்கூரை பந்து வீச அழைத்தார். அவர் தான் முதல் விக்கெட்டையும் எடுத்து கொடுத்தார். ஆம், குஷால் புர்டெல் 38 ரன்கள் எடுத்திருந்த போது ஷர்துல் தாக்கூர் ஓவரில் இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு ரவீந்திர ஜடேஜாவை அழைத்து புதிதாக பிளான் போட்டு நேபாள் வீரர்களை ரோகித் சர்மா ஆட்டமிழக்கச் செய்துள்ளார். போட்டியின் 15.6 ஆவது ஓவரில் பீம் ஷர்கியை கிளீன் போல்டாக்கினார். இதே போன்று 19.6ஆவது ஓவரில் கேப்டன் ரோகித் பவுடெல்லை ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்லிப்பில் நின்றிருந்த ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக 21.5 ஆவது ஓவரில் குஷால் மல்லாவை ஆட்டமிழக்கச் செய்தார். தற்போது வரையில் ரவீந்திர ஜடேஜா 9 ஓவர்கள் வீசி 3 விக்கெட் கைப்பற்றி 35 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். போட்டியின் 37.5ஆவது ஓவரில் மழை பெய்த நிலையில், போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
Asia Cup 2023 Super 4: கனமழை காரணமாக சூப்பர் 4 சுற்று போட்டிகள் மாற்றப்பட வாய்ப்பு!