நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் லட்டு மாதிரியான கேட்சுகளை எல்லாம் கோட்டைவிட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 5ஆவது லீக் போட்டி தற்போது பல்லேகலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவிற்குப் பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பும்ராவிற்குப் பதிலாக இடம் பெற்ற ஷமி: டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த டீம் இந்தியா!
முதல் ஓவரை ஷமி வீசினார். நேபாள் அணியில் குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர் இதில், முதல் ஓவரின் கடைசி பந்தில் குஷால் புர்டெல் கொடுத்த லட்டு மாதிரியான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் கோட்டைவிட்டார். இதே போன்று 2ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆசிப் ஷேக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கோட்டைவிட்டார்.
Asia Cup 2023 Super 4: கனமழை காரணமாக சூப்பர் 4 சுற்று போட்டிகள் மாற்றப்பட வாய்ப்பு!
இதே போன்று, 4.2 ஆவது ஓவரில் புர்டெல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் கோட்டைவிட்டார். இது பவுலர்களுக்கு மட்டுமின்றி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கோபத்தை உண்டாக்கியது. முதல் 5 ஓவர்களுக்குள்ளாக நேபாள் வீரர்கள் கொடுத்த கேட்ச் வாய்ப்பை எல்லாம் இந்திய வீரர்கள் கோட்டைவிட்டு வருகின்றனர். தற்போது வரையில் வங்கதேச அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.
ஒருவேளை போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்படும். அப்படி பகிர்ந்து வழங்கப்பட்டால் இந்திய அணி 2 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 3 புள்ளிகள் உடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
நேபாள்:
குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), ரோகித் பவுடல் (கேப்டன்), பீம் ஷர்கி, சோம்பால் கமி, குல்சன் ஜா, தீபேந்திர சிங் ஐரி, சந்தீப் லமிச்சனே, லலித் ராஜ்பன்ஷி, குஷால் மல்லா, கரண் கேசி.