நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது. மேலும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான 5ஆவது லீக் போட்டி தற்போது நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜஸ்ப்ரித் பும்ராவிற்குப் பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Asia Cup 2023 Super 4: கனமழை காரணமாக சூப்பர் 4 சுற்று போட்டிகள் மாற்றப்பட வாய்ப்பு!
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
நேபாள்:
குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), ரோகித் பவுடல் (கேப்டன்), பீம் ஷர்கி, சோம்பால் கமி, குல்சன் ஜா, தீபேந்திர சிங் ஐரி, சந்தீப் லமிச்சனே, லலித் ராஜ்பன்ஷி, குஷால் மல்லா, கரண் கேசி.
India vs Nepal: முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா – நேபாள் பலப்பரீட்சை!
இரு அணிகளும் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டியானது பல்லேகலே மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் எந்த அணி ஜெயிக்கிறதோ அந்த அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். ஏற்கனவே இந்திய அணி ஒரு புள்ளி பெற்றிருக்கிறது. நேபாள் ஒரு புள்ளி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.