முதல் முறையாக இந்தியா நேபாள் அணியை எதிர்த்து ஆசிய கோப்பை 2023 தொடரின் லீக் போட்டியில் விளையாடுகிறது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் உள்ள குரூப் ஏ பிரிவில் 3 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், இந்தியா மற்றும் நேபாள் அணிகள் முதல் முறையாக மோதும் ஆசிய கோப்பை தொடரின் 5ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு மோதுகின்றன.
முதல் முறையாக நேபாள் அணிக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதிய முதல் போட்டியில் நேபாள் 238 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. நேபாள், இந்தியாவிற்கு ஏற்ற அணியில்லை என்றாலும் கூட அந்த அணி ஆசிய கோப்பைக்கு வந்துள்ளது என்றால் நேபாள் அணியை குறைத்து மதிப்பிட முடியாது.
India vs Nepal: பும்ராவிற்குப் பதிலாக களமிறங்கும் ஷமி; ஷர்துல் தாக்கூருக்கும் வாய்ப்பு உண்டு!
கேஎல் ராகுல் தற்போது ஃபிட்டாக உள்ள நிலையில், இன்றைய போட்டியில் களமிறங்கினால், இஷான் கிஷானுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த போட்டியில் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட இஷான் கிஷானுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் உட்கார வைக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
நேபாள் அணிக்கு எதிராக இந்தியா பிளேயிங் 11:
ரோகித் சர்மா, இஷான் கிஷான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இறுதி செய்த பிசிசிஐ: நாளை அறிவிப்பு?