பேட்டிங்கிற்கு இடையில் பவுலிங் போட்டு பயிற்சி செய்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இன்னும், 6 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில், குறைந்தது 4 அல்லது 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் நிலை உண்டாகும்.
NZ vs AFG: நியூசியில், கேன் வில்லியம்சன் இல்லை – ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு!
உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்ட போது டாப் ஆர்டரில் பந்து வீச்சாளர்கள் இல்லை என்று செய்தியாளர்கள் குற்றம் சாட்டினர். அதற்கு ஏன், இல்லை, நானும், விராட் கோலியும் தேவைப்படும் போது சில ஓவர்கள் பந்து வீசுவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் காயம் காரணமாக அக்ஷர் படேல் விலகிய நிலையில் தான் அவருக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டார்.
வங்கதேச அணி இந்தியாவை தோற்கடித்தால் தன்னுடன் மீன் குழம்பு உணவருந்தலாம் – பாகிஸ்தான் நடிகை!
சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்று விளையாடி ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதன் பிறகு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அஸ்வின் இடம் பெறவில்லை. இந்த நிலையில், தான் நாளை புனே மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது.
SA vs NED: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்து இந்தியாவை எச்சரித்த நெதர்லாந்து!
இந்தப் போட்டியிலும் ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தான் ரோகித் சர்மா பந்து வீசி பயிற்சி செய்துள்ளார். ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்த நிலையில் அவருக்கு ரோகித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் பந்து வீசியுள்ளனர். இதில் ரோகித் சர்மா ஆஃப் ஸ்பின் வீசிய பிறகு ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வங்கதேச அணியில் உள்ள 7 பேட்ஸ்மேன்களில் 4 வீரர்கள் இடது கை பேட்ஸ்மேன்கள். இதனால், அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றாலும் கூடுதலாக ஒரு ஆஃப் ஸ்பின் பவுலராக ரோகித் சர்மா அந்த பொறுப்பை ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது.
Arijit Singh Singing "Lehra Do". Indian Players Playing Football🇮🇳🇮🇳https://t.co/O4FzbtJ406… pic.twitter.com/8ZVVHWzmvb
— Rohit Sharma (@realNabiAfg)