NZ vs AFG: நியூசியில், கேன் வில்லியம்சன் இல்லை – ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

By Rsiva kumar  |  First Published Oct 18, 2023, 1:49 PM IST

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் 16ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.


இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், தற்போது வரையில் 15 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்தில் உள்ளது.

New Zealand vs Afghanistan: சென்னையில் சாதிக்குமா ஆப்கானிஸ்தான்? நியூசிலாந்தின் வெற்றி தொடருமா?

Tap to resize

Latest Videos

 

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, இக்ரம் அலிகில், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபாரூக்கி, ரஷீத் கான்.

நியூசிலாந்து:

டெவான் கான்வே, வில் யங், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மார்க் சேப்மேன், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், மேட் ஹென்றி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்

வங்கதேச அணி இந்தியாவை தோற்கடித்தால் தன்னுடன் மீன் குழம்பு உணவருந்தலாம் – பாகிஸ்தான் நடிகை!

இதே போன்று ஆப்கானிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 16ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிடி பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற அதே அணியுடன் ஆப்கானிஸ்தான் இன்றைய போட்டியிலும் களமிறங்குகிறது. நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக வில் யங் அணியில் இடம் பெற்றுள்ளார்.

SA vs NED: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்து இந்தியாவை எச்சரித்த நெதர்லாந்து!

இதற்கு முன்னதாக, இரு அணிகளும் உலகக் கோப்பைகளில் 2 முறை மோதியுள்ளன, இதில் 2 முறையும் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைகளில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  இதே போன்று 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் கடைசியாக நடந்த உலகக் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

SA vs NED:வரலாற்றை மாற்றி எழுதிய நெதர்லாந்து – 428 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா இப்போ 207 ரன்களில் சரண்டர்!

click me!