நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 16ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், தற்போது வரையில் 15 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்தில் உள்ளது.
வங்கதேச அணி இந்தியாவை தோற்கடித்தால் தன்னுடன் மீன் குழம்பு உணவருந்தலாம் – பாகிஸ்தான் நடிகை!
இதே போன்று ஆப்கானிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 16ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
SA vs NED: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்து இந்தியாவை எச்சரித்த நெதர்லாந்து!
இதற்கு முன்னதாக, இரு அணிகளும் உலகக் கோப்பைகளில் 2 முறை மோதியுள்ளன, இதில் 2 முறையும் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைகளில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் கடைசியாக நடந்த உலகக் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.