IND vs BAN 2nd Test: வங்கதேசத்தை ஒயிட் வாஷ் ஆக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர வலைபயிற்சி!

Published : Dec 21, 2022, 02:33 PM IST
IND vs BAN 2nd Test: வங்கதேசத்தை ஒயிட் வாஷ் ஆக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர வலைபயிற்சி!

சுருக்கம்

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தாகாவில் நடக்க உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த ஒரு நாளை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர், புஜாரா, கில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

உலகக் கோப்பையை கையில் வைத்துக் கொண்டே படுத்து தூங்கிய மெஸ்ஸி: வைரலாகும் புகைப்படம்!

இதையடுத்து, 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தாகாவில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கண்காணித்து வருகிறார். குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் திறமையை வியர்ந்து பார்த்து வருகிறார். அந்தளவிற்கு அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

அணியை வலுப்படுத்த 6 வீரர்களை அறிமுகம் செய்தோம்: எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பு - வேதனையுடன் பாபர் அசாம்!

கடந்த டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் 86 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் அரங்கில் அறிமுகமானார்.  கடந்த 2015 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி தொடரை டிரா ஆக்கியது. அதனால், 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று வங்கதேச அணியை ஒயிட் வாஷ் ஆக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: ஹேப்பி ஃபர்த் டே தலைவா!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!