அணியை வலுப்படுத்த 6 வீரர்களை அறிமுகம் செய்தோம்: எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பு - வேதனையுடன் பாபர் அசாம்!

By Rsiva kumarFirst Published Dec 21, 2022, 11:47 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அணியை வலுப்படுத்தவே 6 புதுமுக வீரர்களை அறிமுகம் செய்தோம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 6 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டி20 தொடரில் பாகிஸ்தான் 3ல் வெற்றி, இங்கிலாந்து 4ல் வெற்றி பெற்று 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-3 என்று கைப்பற்றியது. இதையடுத்து நடந்த 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆக்கியது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இழப்பது இதுவே முதல் முறையாகும்.

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: ஹேப்பி ஃபர்த் டே தலைவா!

இந்த டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலமாக பாகிஸ்தான் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 7 ஆவது இடத்திற்கு பின்னடைவு அடைந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவிய நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, தோல்வி குறித்து பேசிய பாபர் அசாம் கூறியிருப்பதாவது: கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவே இல்லை. பெரும்பாலான இக்கட்டான சூழ்நிலையில் நான் பேட்டிங் செய்வதையே விரும்புகிறேன். கேப்டன் பொறுப்பு என்பது ஒரு மரியாதை. எப்போதும் எனது நாட்டிற்காக நான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புகிறேன்.

2022ம் ஆண்டில் விளையாட்டுலகை சோகத்தில் ஆழ்த்திய மரணங்கள்

தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அணியை வலுப்படுத்த சிறிது காலம் தேவைப்படும். தற்போது இடம்பெற்றுள்ள இளம் வீரர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒரு டெஸ்ட் அணியை உருவாக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். இது தான், 6 வீரர்களை அறிமுக செய்ததற்கு காரணம் என்று கூறியுள்ளார்.

INDW vs AUSW: கடைசி டி20 போட்டியிலும் இந்தியா படுதோல்வி.. 4-1 என அபாரமாக தொடரை வென்றது ஆஸ்திரேலிய மகளிர் அணி

click me!