மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட கேஎல் ராகுல்: வைரலாகும் மாணவனின் வீடியோ!

By Rsiva kumar  |  First Published Jun 12, 2023, 10:53 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் வறுமையில் வாடும் மாணவனின் பட்டப்படிப்பு செலவுக்கு உடனடியாக நிதியுதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.


இந்திய அணியின் தொடக்க வீரராக இருப்பவர் கேஎல் ராகுல். ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்த சீனிசன் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். மேலும், காலில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். இதன் காரணமாக நடந்து முடிந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இந்தப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.

TNPL 2023: ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய விஜய் சங்கர்: ஐபிஎல்லில் விட்டதிலிருந்து தொடங்கிய சாய் சுதர்ஷன்!

Tap to resize

Latest Videos

இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் ஆசிய கோப்பை 2023 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா விளையாட உள்ளது. தற்போது ஓய்வில் இருக்கும் கேஎல் ராகுல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்க இருக்கிறார். இந்த நிலையில், கர்நாடகாவில் பியுசி படிப்பில் 95 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற மாணவன் அம்ருத் மான்விகட்டியின் பிகாம் படிப்பிற்கான ஒரு வருட செலவை ஏற்றுக் கொண்டுள்ளார்.

TNPL 2023: முதல் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் பவுலிங்!

கர்நாடகாவின் ஹூப்ளியில் கல்லூரிக் படிப்பை தொடர விரும்பும் ஒரு ஏழை மாணவனுக்கு நிதி உதவி வழங்குவதாக ஒப்புக் கொண்டுள்ளார். அம்ருத் பியுசி தேர்வில் 95 சதவிகித மதிப்பெண் பெற்ற நிலையில் கர்நாடகாவின் ஹூப்ளியில் உள்ள KLE கல்லூரியில் வணிகவியல் இளங்கலை (B.Com) படிக்க விரும்பியுள்ளார். ஆனால், வறுமையின் காரணமாக அவரால் படிப்பு தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

IPL 2024: ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை விடுவிடுக்கும் குஜராத் டைட்டன்ஸ்!

இது தொடர்பாக அவரது நண்பர் மஞ்சு ஹெப்சூருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவரும், மும்பையில் உள்ள அக்‌ஷய் என்பரிடம் கூறியுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரிடம் நெருங்கி பழகியவர். அவர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஆதலால், இது தொடர்பாக அவர்களிடத்தில் கூறியதாக தெரிகிறது.

ஆனால், கேஎல் ராகுல் குறித்து நன்கு அறிந்திருந்த அக்‌ஷய், அவரிடம் கேட்பதற்குள்ளாக அவரிடமிருந்து போன் கால் வந்துள்ளது. இதையடுத்து, அம்ருத்தின் முதல் ஆண்டிற்கான உணவு மற்றும் நோட் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். இது மட்டுமின்றி இதற்கு முன்னதாக கோவிட் 19 நேரங்களில் கேஎல் ராகுல் ஏராளமான உதவிகளை செய்துள்ளார்.

இதையடுத்து கேஎல் ராகுலின் உதவியை அறிந்த அம்ருத், வீடியோ வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!

 

KL Rahul has financially helped a deserving (95%) student named Amrut Mavinkatti, who lost his mother from Mahalingapura to study B. Com at Hubballi’s KLE College through Akshay Sir.

Man With Golden Heart 🥺❤ pic.twitter.com/6xcT9pEsx6

— KLRAHUL TRENDS™ (@KLRahulTrends_)

 

click me!