TNPL 2023: ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய விஜய் சங்கர்: ஐபிஎல்லில் விட்டதிலிருந்து தொடங்கிய சாய் சுதர்ஷன்!

Published : Jun 12, 2023, 09:18 PM IST
TNPL 2023: ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய விஜய் சங்கர்: ஐபிஎல்லில் விட்டதிலிருந்து தொடங்கிய சாய் சுதர்ஷன்!

சுருக்கம்

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் எடுத்துள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் இன்று பிரமாண்டமாக தொடங்கியது. இம்பேக்ட் பிளேயர் மற்றும் டிஆர்எஸ் என்று புதிய விதிமுறைகளுடன் இந்த சீசன் தொடங்கியுள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், பா11சி (ரூபி) திருச்சி, சீகம் மதுரை பாந்தர்ஸ் என்று மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன.

TNPL 2023: முதல் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் பவுலிங்!

இன்று தொடங்கிய டிஎன்பிஎல் 7ஆவது தொடரின் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழர்கள் (ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்) அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணியில், தொடக்க வீரர் சச்சின் 2 ரன்களில் வெளியேற சுரேஷ் குமார் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராம் அரவிந்த் அடுத்த பந்திலேயே வெளியேறினார். இருவரும் விஜய் சங்கர் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.

IPL 2024: ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை விடுவிடுக்கும் குஜராத் டைட்டன்ஸ்!

அதன் பிறகு சாய் சுதர்ஷன் மற்றும் முகிலேஷ் இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 120 ரன்கள் தான் வரும் என்று எண்ணிய நிலையில், சாய் சுதர்ஷன் அதிரடி காட்டத் தொடங்கினார். இந்த சீசனின் முதல் அரைசதமும் அடித்தார். கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் விளாசினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்துள்ளது. இதில், சாய் சுதர்ஷன் 86 ரன்கள் குவித்த நிலையில் கடைசி பந்தில் ரன் அவுட் செய்யப்பட்டார். கேப்டன் ஷாருக்கான் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்:

பால்சந்தர் அனிருத், NS சதுர்வேத், S கணேஷ், விஜய் சங்கர், ராஜேந்திரன் விவேக், துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), P புவனேஸ்வரன், S அஜித் ராம், ரவி ஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் (கேப்டன்), G பெரியசாமி, S மணிகண்டன்.

லைகா கோவை கிங்ஸ்:

பி சச்சின், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ராம் அரவிந்த், யு முகிலேஷ், ஷாருக் கான் (கேப்டன்), எம் முகமது, கிரண் ஆகாஷ், மணிமாறன் சித்தார்த், ஜாதவேத் சுப்ரமணியன், கே கௌதம் தாமரை கண்ணன்

டிவி அம்பயரை விமர்சித்த கில்லிற்கு சம்பளத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதம், டீமுக்கு 100 சதவிகிதம் அபராதம்!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!
IND vs ZIM: 149 கி.மீ வேகம்.. கம்பேக் மேட்ச்சில் மரண மாஸ் காட்டிய மயங்க் யாதவ்.. வரலாற்று சாதனை!