எனது குட்டி இளவரசிக்கு 2ஆவது பிறந்தநாள்: தந்தையாக மகளுக்கு வாழ்த்து தெரிவித்த உமேஷ் யாதவ்!

Published : Jan 01, 2023, 03:53 PM ISTUpdated : Jan 01, 2023, 03:57 PM IST
எனது குட்டி இளவரசிக்கு 2ஆவது பிறந்தநாள்: தந்தையாக மகளுக்கு வாழ்த்து தெரிவித்த உமேஷ் யாதவ்!

சுருக்கம்

தனது மகளின் 2ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் டுவிட்டரில் மகளின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்த உமேஷ் யாதவ், கடந்த 2010 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமானார். இதே போன்று 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 போட்டியில் அறிமுகமனார். இப்படி அனைத்து போட்டிகளிலும் உமேஷ் யாதவ் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

நியூ இயர் பார்ட்டியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி: வைரலாகும் புகைப்படம்!

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி ரஞ்சி டிராபி போட்டியில் விதர்பா அணியில் இடம் பெற்று மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். 2010, 2011, 2012 என்று ஒவ்வொரு ஆண்டாக டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி விளையாடி உமேஷ் யாதவிற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனரான தனய வத்வா உடன் திருமண நிச்சயமானது.

எனது பதவிக்காலம் முடிவதற்குள் பாகிஸ்தானில் 2 அணிகள் உருவாக்குவதே எனது நோக்கம்: ஷாகீத் அப்ரிடி!

திருமண நிச்சயமான ஒரே மாதத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா வத்வா திருமணம் நடந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா வத்வா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில், குணார் இன்று தனது 2ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், உமேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் எனது குட்டி இளவரசிக்கு 2ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு, குழந்தை கேக் வெட்டுவது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

பின்ச் அதிரடி வீண்: 5ஆவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பெர்த் அணி!

கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் இடம் பெற்று 4 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடினார். 2012 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் 17 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று 4 ஆண்டுகள் விளையாடினார். 2018 ஆம் ஆண்டு பெங்களூரு அணி உமேஷ் யாதவ்வை வாங்கியது. அந்த அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

மகளுடன் புத்தாண்டை கொண்டாடிய எம் எஸ் தோனி: வைரலாகும் வீடியோ!

அதன் பிறகு பெங்களூரு அணி உமேஷ் யாதவ்வை விடுவிக்க, 2021 ஆம் ஆண்டு டெல்லி அணி அவரை கைப்பற்றியது. 2022 ஆம் ஆண்டு மீண்டும் கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்தது. கடந்த ஆண்டு நடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் இடம் பிடித்திருந்தார். ஆனால், இலங்கைக்கு எதிரான போட்டிகளில் உமேஷ் யாதவ் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அழகான 2022 ஆம் ஆண்டு நினைவுகளுக்கு நன்றி - ஷிகர் தவான்!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!